கோடீஸ்வரர் ஆக சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்போதும் ஒரு சாமானியனுக்கு சவாலான பணியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்)  ஆகிய இரண்டு திட்டங்களுமே சிறப்பானதாக இருப்பதால், முதலீட்டாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது. இரண்டு திட்டங்களும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் அதே நேரத்தில் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன, ஆனால் எது அதிக பலன்களைத் தரும் என்பதை விரிவாக புரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்பிஎஸ் வாத்சல்யா திட்ட முதலீடு மற்றும் வருமானம்


குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு NPS வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. NPS வாத்சல்யா, ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க  வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், கூட்டு வட்டியின் நன்மையினால் சிறந்த கார்பஸை உருவாக்க முடியும். NPS வாத்சல்யா யோஜனாவில் ஆண்டுக்கு 30,000 ரூபாய்  என்ற அளவில் 18 வருடங்கள் தொடர்ந்து முதலீட்டைச் செய்தால், நீங்கள் சுமார் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இந்த முதலீடு ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானத்தை அளிக்கிறது. 60 வயது வரை இந்த நிதியில் பணம் எடுக்கவில்லை என்றால், உங்களின் மொத்த நிதி ரூ.2.75 கோடியை எட்டும்.


குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதலீடு


இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். குழந்தைக்கு 18 வயதாகும்போது, ​​வாத்சல்யா கணக்கை வழக்கமான என்பிஎஸ் கணக்காக மாற்றலாம். அல்லது நீங்கள் விருப்பப்பட்டால் இந்த  திட்டத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால், வருடாந்திரத் திட்டத்தை பெற, குறைந்தபட்சம் 80% முதிர்வுத் தொகையை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். 20% தொகையை மட்டுமே மொத்தமாகத் திரும்பப் பெற முடியும்.


மேலும் படிக்க | EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசு


PPF திட்டத்தில் முதலீடு மற்றும் வருமானம்


மறுபுறம், நீங்கள் ஒரு தபால் அலுவலகம் அல்லது வங்கியில் PPF கணக்கைத் தொடங்கி, அதில் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்தால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த டெபாசிட் சுமார் ரூ.1.03 கோடியாக இருக்கும். PPF தற்போது 7.1% வருடாந்திர வட்டியை வழங்குகிறது, இது பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்கும் திட்டமாக அமைகிறது.


இரண்டில் எந்த திட்டம் சிறந்தது?


கோடீஸ்வரராக வேண்டும் என்பதே இலக்காக இருந்தால், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய உங்களுக்கு நேரம் இருந்தால், NPS வாத்சல்யா யோஜனா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதிர்பார்க்கப்படும் 10% வருவாயுடன், PPF உடன் ஒப்பிடும்போது அதிக நிதியை உருவாக்க உதவுகிறது. ஆனால் NPS இன் திரும்பப் பெறும் நிபந்தனைகள் மற்றும் நிதியின் லாக்-இன் காலம் ஆகியவை குறைந்த பணப்புழக்கத் திட்டமாக மாற்றுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள், 


அதே நேரத்தில், PPF ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான விருப்பமாகும். குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு. அதன் வருமானம் NPS ஐ விட குறைவாக இருந்தாலும், வரி சேமிப்பு மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டிற்கு ஏற்றது. உங்கள் முதலீட்டு உத்தி உங்கள் தேவை மற்றும் ரிஸ்க் எடுக்கும் உங்கள் திறனைப் பொறுத்தது. நீங்கள் அதிக வருமானம் பெற விரும்பினால் மற்றும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய முடியும் என்றால், NPS வாத்சல்யா யோஜனா சரியான தேர்வாக இருக்கும். ஆனால் நீங்கள் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பினால், PPF சிறந்த தேர்வாக இருக்கும்.


மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ