NPS vs UPS: யுபிஎஸ் -இல் மாறுவதால் யாருக்கு நன்மை? இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்
Unified Pension Scheme: UPS -க்கு மாறுவது நல்லதா? அல்லது, NPS -இல் தொடர வேண்டுமா? எதில் அதிக நன்மைகள் கிடைக்கும்?
Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய முறையாக தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System) அல்லது UPS என இவை இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இந்த நிலையில் UPS -க்கு மாறுவது நல்லதா? அல்லது, NPS -இல் தொடர வேண்டுமா? எதில் அதிக நன்மைகள் கிடைக்கும்? ஊழியர்கள் மனதில் இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளன. என்.பி.எஸ்-ல் இருந்து யு.பி.எஸ்-க்கு மாறுவதால் நன்மை கிடைக்குமா அல்லது நஷ்டம் ஏற்படுமா? யாருக்கு இதனால் நன்மை ஏற்படும்? யார் UPS -க்கு மாறுவது சரியல்ல? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை இந்த பதிவில் காணலாம். புதுய ஓய்வூதிய முறையான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் ஊழியர்கள் சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் எந்த ஊழியர்கள் சேர முடியும்?
- தற்போது தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் உள்ளவர்கள் மட்டுமே UPS ஐத் தேர்வு செய்ய முடியும்.
- ஓய்வு பெற்ற ஊழியர்களும் இதில் அடங்குவர்.
- UPS இல், பணியாளர்கள் குறைந்தபட்ச பணிக்காலமான 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறும்போது, கடந்த 12 மாதங்களில் அவர்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
- ஆனால், NPS இல் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை சந்தையில் இருந்து பெறப்பட்ட வருமானத்தைப் பொறுத்தது. ஆகையால், இதை நிலையான வருமானமாக எடுத்துக்கொள்ள முடியாது.
நிலையான ஓய்வூதிய தொகை
யுபிஎஸ் -இல் குறைந்தபட்சம் 10 வருட சேவை காலத்திற்கு விகிதாசார அடிப்படையில் ஓய்வூதியம் (Pension) தீர்மானிக்கப்படும். இது தவிர, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஓய்வு பெற்றால், அந்த ஊழியர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme)
முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ், ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலல்லாமல், UPS என்பது ஒரு பங்களிப்பு திட்டமாகும், இதில் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். அதே சமயம் மத்திய அரசின் பங்களிப்பு 18.5 சதவீதமாக இருக்கும். NPS இன் கீழ், நிறுவனம் சார் பங்களிப்பு 14 சதவீதமாகவும், பணியாளரின் பங்களிப்பு 10 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
NPS vs UPS: ஓய்வூதிய முறையை மாற்றும் முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளவும்
- ஒரு ஊழியர் NPS -இல் இருந்து UPS -க்கு மாறினால் அவர் மீண்டும் NPSக்கு மாற முடியாது.
- மார்ச் 31, 2025க்கு முன் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு என்பிஎஸ்-ன் கீழ் ரூ.800 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது.
- அத்தகைய ஊழியர்கள் UPS விருப்பத்தைத் தேர்வுசெய்தால், அவர்கள் நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.
- யுபிஎஸ் ஒவ்வொரு ஆண்டும் அரசு கருவூலத்தில் ரூ.6250 கோடி கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இருப்பினும், ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களால், இதற்கான செலவு ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ