NSC vs Mutual Funds: இன்றைய காலகட்டத்தில், மக்கள் மத்தியில் சேமிக்கும் ஆர்வம் பெருகியுள்ளது. திட்டமிட்டு முதலீடு செய்தால், எளிதில் பணக்காரர் ஆகலாம். முதலீடு என்ற உடன் நினைவிற்கு வருவது, பொதுத் துறை வங்கிகள். ஆனால், அரசு நடத்தும் பல வகையான வைப்புத் திட்டங்களும் நல்ல வருமானத்தை கொடுக்கின்றன. அது தவிர பரஸ்பர நிதியங்களும் , பணத்தை பன்மடங்காக்க உதவுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசின் திட்டங்களை பொறுத்தவரை, அஞ்சல் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ், நல்ல வருமானம் கொடுக்கும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்று. இந்த திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்யலாம், அதற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 


மியூச்சுவல் ஃபண்டுகளில், மொத்த தொகையை டெபாசிட் செய்து நல்ல வட்டி விகிதங்களைப் பெறலாம். இருப்பினும், இந்தத் திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், NSC அல்லது பிற அரசாங்கத் திட்டமும் போன்ற பரஸ்பர நிதிகளில் வட்டிக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. எனினும், சராசரியாக 12 சதவீதம் வருமானம் கிடைப்பதாக (Investment Tips) நிபுணர்கள் கருதுகின்றனர். 


மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்ய நினைத்தால், தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது பரஸ்பர நிதியம் இதில் எதில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். 


உதாரணத்திற்கு, NSC என்னும் தேசிய சேமிப்புச் சான்றிதழில் நீங்கள் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்தால், 7.7 சதவீத விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு வட்டியாக ரூ.44,903 கிடைக்கும். முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.1,44,903 பெறுவீர்கள். NSC சான்றிதழை வாங்கும் தேதியின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள். இடைப்பட்ட காலகட்டத்தில், அரசு வட்டி விகிதங்களை அதிகரித்தாலோ அல்லது குறைத்தாலோ, அது உங்கள் NSC கணக்கைப் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியம்


மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால், கிடைக்கும் வருமானம் 12 சதவீத என வைத்திக் கொண்டால், வட்டியாக ரூ.76,234 கிடைக்கும்.இதன் மூலம் 5 ஆண்டுகளில் உங்கள் முதலீடு மொத்தம் ரூ 1,76,234 ஆல பெருகும். இந்த வருமானம் 12 சதவீதத்திற்கும் குறைவான அளவில், உதாரணத்திற்கு 10% வட்டி என எடுத்துக் கொண்டால் 5 ஆண்டுகளில் ரூ.1,61,051 என்ற அளவில் உங்கள் நிதி பெருகும். அதேசமயம் 12%க்கு மேல் அதாவது சுமார் 15% வருமானம் கிடைத்தால், முதலீட்டுத் தொகை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.2,01,136 என்ற அளவில் உங்களிடம் நிதி இருக்கும். 


மேலும் படிக்க | Budget 2024: அரசு ஊழியர்கள், சம்பள வர்க்கம், நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்


கவனத்தில் கொள்ள வேண்டியவை


சந்தை நிலவரத்தை மனதில் கொண்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்தப் பணத்தை முதலீடு செய்யலாம். நீங்கள் SIP போன்ற ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்ய விருப்பமில்லை என்றால், நீங்கள் அதிக வருமானம் பெறும் போது, அல்லது எதிர்பாராத நிலையில் பணம் பெறும் போது, நீங்கள் அதை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.


இருப்பினும், சந்தையைப் பற்றிய நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே பணத்தை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி நிபுணர்கள் நம்புகிறார்கள். இதில் ஒரு சிறு தவறும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் முதலீட்டை புதிதாக தொடக்க விரும்பினால், சந்தையில் குறைந்த ரிஸ்க் எடுக்கும் போது நல்ல வருமானத்தைப் பெற விரும்பினால், SIP சிறந்த தேர்வாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும் அல்லது நீங்களே சந்தை நிலையை ஆராயவும்.)


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ