கட்டுக்குள் அடங்காத விலை ஏற்றம் கண்டுள்ள வெங்காயம்...
நாட்டின் பொதுவான நுகர்வோரை வெங்காயம் அழ வைக்கத் துவங்கியுள்ள நிலையில், வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஆண்டு ஜூன் முதல் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது என விமர்சிக்கப்படுகிறது.
நாட்டின் பொதுவான நுகர்வோரை வெங்காயம் அழ வைக்கத் துவங்கியுள்ள நிலையில், வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஆண்டு ஜூன் முதல் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது என விமர்சிக்கப்படுகிறது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மண்டியில் வெங்காயத்தின் மொத்த விலை கிலோவுக்கு ரூ. 50-ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மிக உயர்ந்த விலை ஏற்றமாகும். அதே நேரத்தில், மகாராஷ்டிராவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கானில் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ .50-ல் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் வெங்காயப் பங்கு மிகக் குறைவாக உள்ளது என வர்த்தகர்கள் தெரிவிக்கன்றனர். இதன் காரணமாக மண்டிக்கு வெங்காய வருகை குறைந்து வருவது தான் என கூறுகின்றனர். உள் நுகர்வு எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் வெங்காய விலை அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசாத்பூர் மண்டியின் தொழிலதிபரும், வெங்காய வணிக சங்கத்தின் தலைவருமான ராஜேந்திர சர்மா தெரிவிக்கையில்., தென்னிந்தியாவின் பிராந்தியங்களில் பெய்யும் மழை காரணமாக, வெங்காயம் பயிர் தாமதமாக வருவதற்கும், புதிய பயிர் தயாரிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாகவும் வெங்காய விலை அதிக ஏற்றம் கண்டுள்ளது.
முன்னதாக 2015-ஆம் ஆண்டில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ .50 க்கு மேல் இருந்தது. தற்போது மீண்டும் அந்த அளவு விலை ஏற்றம் கண்டுள்ளோம்" என்று சர்மா கூறியுள்ளார்.
வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க, அரசாங்கம் கடந்த வாரம் அதன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) டன்னுக்கு 850 டாலராக நிர்ணயித்தது. இதனால் ஏற்றுமதி தடை நாட்டின் சந்தைகளில் வெங்காய விநியோகத்தை குறைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 13 தேதியிட்ட வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) அறிவிப்பின்படி, இது தொடர்பாக அடுத்த உத்தரவு வரும் வரை வெங்காயத்தை டன்னுக்கு 850 டாலருக்கும் குறையாத விலையில் (FOB) ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்திருந்தது. எனினும் வெங்காயத்தின் விலை குறைந்தபாடு இல்லை. இதன் காரணமாக வெங்காயத்தின் விலையை குறைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக விமர்சிக்கப்படுகிறது.