வருமான வரித் துறையால்  தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான பத்து இலக்க எண்ணெழுத்து கொண்ட ஒரு அடையாள அட்டை தான் பான் அல்லது நிரந்தர கணக்கு எண் அட்டை ஆகும்.  பான் கார்டு தனி நபரது முக்கியமான அடையாள ஆவணமாக பயன்படுவதோடு மட்டுமின்றி, வங்கிக் கணக்கைத் தொடங்குதல், கடனுக்கு விண்ணப்பித்தல், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தல், முதலீடு செய்தல் போன்ற பல்வேறு வகையான நிதி சம்மந்தமான பரிவர்த்தனைகளுக்கு இது இன்றியமையாததாக உள்ளது.  ஒருவரது பான் கார்டில் அந்த குறிப்பிட்ட நபரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி மற்றும் பான் எண் போன்ற தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.  இந்திய குடிமகன்களின் முக்கியமான அடையாள ஆவணங்களுள் ஒன்றான ஆதார் கார்டு எப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருக்கிறதோ அதேபோன்று பான் எண் ஒவ்வொரு அட்டைதாரருக்கும் தனிப்பட்டதாக உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி ரயிலில் இந்த சேவைகள் இருக்காது!


இந்தியாவில் வரிக்கு உட்பட்ட வருமானம் பெறும் எந்தவொரு நபருக்கும் பான் கார்டு முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. வருமான வரி செலுத்தும் நபர்கள் பான் கார்டை பெறத் தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.  வருமான வரித்துறையின் விதிகளின்படி, ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நபரும் அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.  ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச் சட்டத்தை மீறும் செயலாக கருதப்படுகிறது.  அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் அவர்கள் சட்டரீதியான விளைவுகள் மற்றும் அபராதங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.  


ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 272B-ன் கீழ், தகவல் தொழில்நுட்பத் துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.  மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கும் நபருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட நேரிடும்.  
எனவே யாரேனும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் அந்த கூடுதல் பான் கார்டுகளை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  மேலும் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஜூன் 30, 2023க்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்துவிட வேண்டும், இல்லையென்றால் ஜூன் 30க்கு பிறகு அவர்களது பான் கார்டு செயலிழந்துவிடும்.


மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ