2023 ஆம் ஆண்டு முடிய இன்னும் 6 நாட்களே உள்ளன, மேலும் புத்தாண்டை அதாவது 2024 ஐ வரவேற்க நாடு முழுவதும் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் புத்தாண்டு கொண்டாட்ட சூழல் நிலவுகிறது.ஆனால், ஆன்லைனில் பணம் செலுத்தி வரும் மாபெரும் நிறுவனமான Paytm நிர்வாகம், புத்தாண்டு தொடங்கும் முன்பே ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உண்மையில், Paytm நிறுவனத்தின் தாய் நிறுவனமான One 97 Communications 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செலவு குறைப்பு நடவடிக்கை


2023 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்பே, Paytm பெரிய  அளவில் பணிநீக்கங்களைச் செய்துள்ளதாகவும், இதன் கீழ், 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் (Paytm Lay Off) பணிநீக்கம் செய்துள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது . Paytm இந்த பெரிய பணிநீக்கங்களை செலவைக் குறைத்தல் மற்றும் வணிகத்தை ஒழுங்குபடுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாக செய்துள்ளது. இதனுடன் எதிர்வரும் நாட்களில் இவ்வாறான மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பணி நீக்கங்கள் கடந்த சில மாதங்களில் நடந்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.


Paytm நிறுவன பணியாளர்களில் 10% பேருக்கு பாதிப்பு


விஜய் சேகர் ஷர்மாவின் Paytm நிறுவனத்தில் எடுக்கப்பட்ட பணிநீக்கங்களின் இந்த முடிவு Paytm இன் பணியாளர்களில் 10 சதவீத பணியாளர்களை பாதித்துள்ளது. இப்போது Paytm நிறுவனத்தின் பெயரும் சமீப காலங்களில் fintech நிறுவனங்களின் முக்கிய பணிநீக்கங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. பேடிஎம்மில் ஏற்பட்ட இந்த பணிநீக்கத்தால், அந்நிறுவனத்தின் கடன் வணிகம் தொடர்பான பிரிவு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


பணி நீக்கம் செய்ய முடிவு 


பணிநீக்கத்தை ஏற்றுக்கொண்ட நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் செலவுகளை 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க Paytm இலக்கு வைத்துள்ளது என்றார். பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பதவிகள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றப்பட்டவை என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த பணிநீக்கம் குறித்து விளக்கமளிக்கும் போது, ​​வரும் ஆண்டில் Paytm Payment வணிகத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 15,000 ஆக அதிகரிக்க முடியும் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | Paytm பங்குகள் விலை 20% சரிவு... காரணங்கள் இவை தான்!


புதிய வணிகத்தில் நிறுவனத்தில் கவனம்


Paytm இப்போது நிறுவனத்தை விரிவுபடுத்த புதிய தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது என்று அறிக்கை கூறுகிறது. சில துறைகளில் உள்ள ஆட்கள் குறைக்கப்படும் அதே நேரத்தில், புதிய திறமையாளர்களை பணியமர்த்த காப்பீட்டு விநியோக சந்தையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், AI ஆட்டோமேஷனுடன் Paytm தனது செயல்பாடுகளை மாற்றி வருவதாக Paytm செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ