Pension Scheme: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) மாதாந்திர ஓய்வூதிய நிர்ணயத்திற்கான ஃபார்முலாவை மாற்ற பரிசீலனை செய்து வருகிறது.  ஃபார்முலாவை மாற்றுவதன் மூலம் முழு ஓய்வூதிய சேவையின் போது பெறப்பட்ட சராசரி ஓய்வூதிய ஊதியத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம்  தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  இருப்பினும், ஓய்வூதியம், அதற்கான தொகை மற்றும் ஆபத்து ஆகியவற்றை மதிப்பிடும் 'ஆக்சுவரி' அறிக்கை வந்த பிறகே இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.  தற்போது ​​இபிஎஃப்ஓ ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்-95) கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயிப்பதற்கு, ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் (கடந்த 60 மாதங்களின் சராசரி சம்பளம்) மடங்கு ஓய்வூதிய சேவை / 70 ஐப் பயன்படுத்துகிறது.  அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யும் நபரின் கடந்த 60 மாதங்களுக்கான சராசரி சம்பளம் ரூ. 80,000 என்றும் அவரது ஓய்வூதியம் பெறக்கூடிய வேலை 32 ஆண்டுகள் என்றும் வைத்துக்கொள்வோம்.  இதில் தற்போதுள்ள ஃபார்முலாவின் கீழ் (80,000 மடங்கு 32/70), அவரது ஓய்வூதியம் ரூ.36,571 ஆக இருக்கும்.  மறுபுறம், முழு ஓய்வூதிய வேலையின் போது சராசரி சம்பளத்தை எடுத்துக் கொள்ளும்போது, ​​​​வேலையின் ஆரம்ப நாட்களில் சம்பளம் குறைவாக இருப்பதால், மாதாந்திர ஓய்வூதியத்தின் நிர்ணயம் குறைவாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | DA Hike: 3 லட்சம் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு!


உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், உயர் ஓய்வூதியத்தை தேர்வு செய்ய சந்தாதாரர்களுக்கு 4 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறுஅரசுக்கு கோரிக்கை விடுத்தது.  அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய முதலாளிகளுடன் கூட்டு விருப்பப் படிவத்தை நிரப்பும் வகையில் தனது சந்தாதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆன்லைன் வசதியினை வழங்கியுள்ளது.  படிவத்தை நிரப்புவதற்கான காலக்கெடு முன்னர் மே 3, 2023 ஆக இருந்த நிலையில், இது தற்போது ஜூன் 26, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தற்போது, ​​இபிஎஃப்ஓ ​​சந்தாதாரர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.15,000 என்ற நிலையான வரம்பில் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்கின்றனர், ஆனால் அந்த ஊழியர்களின் உண்மையான சம்பளம் இதை விட அதிகமாக இருக்கிறது.  அதிக ஓய்வூதியம் என்ற ஆப்ஷன் மூலம் ஊழியர்கள் மாதந்தோறும் அதிக ஓய்வூதியத்தைப் பெற முடியும்.  இபிஎஃப்ஓவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஊழியர்கள் 12 சதவீதம் பங்களிக்கின்றனர், மறுபுறம் முதலாளியின் 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் இபிஎஸ்-க்கு செல்கிறது மற்றும் மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது.  


ரூ.15,000 அடிப்படை சம்பளம் என்ற வரம்பில் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு 1.16 சதவீதத்தை அரசு மானியமாக வழங்குகிறது.  நீண்ட காலத்திற்கு அதிக ஓய்வூதியம் வழங்குவது அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது, அதனால்தான் புதிய ஃபார்முலாவை கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 2021-22 அறிக்கையின்படி, ரூ.6,89,211 கோடி ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, அடுத்ததாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 2021-22 அறிக்கையின்படி, இபிஎஸ் நிதியில் ரூ.50,614 கோடி வட்டி கிடைத்துள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் குறித்த பெரிய அப்டேட், கிடைக்கவுள்ளதா நிலுவைத் தொகை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ