அவசர தேவைக்கு உதவும் கிரெடிட் கார்டுகளை பண்டிகை காலத்தின்போது அதிகளவு பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், அதன்பின்னர் அதனை பயன்படுத்துவதை குறைத்துள்ளனர். ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாட்டில் சராசரி மாதாந்திர மொத்த கிரெடிட் கார்டு செலவு ரூ.84,000 கோடி முதல் ரூ.88,000 கோடி வரை இருக்கும் என்று கணித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொகையானது டிசம்பர் காலாண்டை விட மிகவும் குறைவு.அந்த அறிக்கையின்படி, நாட்டின் கிரெடிட் கார்டு நுகர்வோர் டிசம்பர் காலாண்டில் மொத்தம் ரூ.94,700 கோடி செலவிட்டுள்ளனர். இந்த நிதியாண்டு தொடங்கி ஒன்றரை மாதங்களுக்கும் கடந்துள்ள நிலையில், இதுவரை மாதாந்திர சராசரி கிரெடிட் கார்டு செலவினம் ரூ.76,700 கோடியை மட்டுமே எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 


மேலும் படிக்க | கிசான் கிரெடிட் கார்டு: எப்படி விண்ணப்பிப்பது? தேவையான ஆவணங்கள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை



கிரெடிட் கார்டு வழங்குபவர்களைப் பொறுத்தவரை, HDFC வங்கி முன்னணியில் உள்ளது. அந்த வங்கியின் டிசம்பர் மாத சந்தைப் பங்கு மட்டும் 25.1 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கார்டுகள் 19.8 சதவீத பங்கைக் கொண்டிருந்தன. இதேபோல், ஐசிஐசிஐ வங்கியும் கிரெடிட் கார்டு வழங்குவதில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளன. 


கொரோனா அச்சுறுத்தலால் எழுந்துள்ள பொருளாதார சிக்கல், பணப்புழக்கம், வருமானம் மற்றும் செலவு குறித்து மக்களிடையே எழுந்துள்ள கவலை அகியவை காரணமாக கிரெடிட் கார்டு பயன்பாட்டை மக்கள் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் என வங்கி நிபுணர்கள் கூறியுள்ளனர். 


மேலும் படிக்க | இந்த 5 கிரெடிட் கார்டு விவரங்களை தெரிஞ்சுக்கோங்க! அபராதங்கள் வராமல் தடுக்கலாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR