Personal Finance: நாட்டில் உள்ள மக்களிடையே தனிநபர் கடன் பெறும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் சில சமயங்களில் வங்கிகள் அல்லது NBFC-களில் தங்கள் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்குகிறார்கள். இதன் விளைவாக பலமுறை கடன் வலையில் சிக்கி, கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் வாடிக்கயாளர்களின் தேவையறிந்து உங்கள் கடனைத் தீர்க்க உதவும் ஸ்டார்ட்அப்பை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். அந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர் FREED. இந்த ஸ்டார்ட்அப் ஒரு தனிநபரின் தனிப்பட்ட கடன்களை தீர்க்க உதவி செய்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FREED எப்படி வேலை செய்கிறது?


FREED அதன் வாடிக்கையாளர்களின் சார்பாக கடன் வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. கடனை திருப்பிச் செலுத்துவதற்கான விதிகள் உள்ளிட்டவை வாடிக்கயாளர்களுக்கு பெரும்பாலும் தெரியாமல் இருப்பதால், அந்த விதிகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஸ்டார்ட்அப் தீர்வு காண முயற்சி எடுக்கிறார்கள். மேலும், வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு கடன் தொகையையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். 


இதுவரை மொத்தம் ரூ.13 கோடி கடனைத் தீர்த்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 45,000 வாடிக்கையாளர்களுக்கு கடன் தொடர்பான ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 400 கோடி ரூபாய் மதிப்பிலான தனிநபர் கடன்களை கையாளும் அந்த நிறுவனம், தனிநபர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் உதவிகளை செய்து கொடுக்கிறது. 


இந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரித்தேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், நாட்டில் தனிநபர் கடன்கள் செலுத்தாத தொகை ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. தற்போது, ​​கடனை திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். மறுபுறம், கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கடன் தொகையில் 20 சதவீதத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும் சூழல் உள்ளது. இதனை தங்கள் நிறுவனமான FREED மீட்டெடுப்பதற்கு உதவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | Post Office: போஸ்ட் ஆஃபீஸில் 100 ரூபாய் முதலீடு .. ரூ.26 லட்சம் ரிட்டன்: சேமிப்புக்கு உத்திரவாதம்


மேலும் படிக்க | IRCTC Rule: பெர்த் தேர்வில் புதிய ஐஆர்சிடிசியின் புதிய விதிமுறைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ