சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் இன்றைய விலை நிலவரம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை  பழக்கத்தில் இருந்தது. 


ஆனால், தற்போது, பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி நிர்ணயிக்கப்படுகின்றன. சர்வதேச நிலையில், கச்சா எண்ணெய் விற்கப்படும் விலைக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல்  விலைகள் தினமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.


Also Read | Cyclone Tauktae: புயலின் சேதங்களை பார்வையிட குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி


Petrol Diesel Rate Today: இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும்  செய்யப்படவில்லை. எனவே, பெட்ரோல் லிட்டருக்கு 94.54 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 88.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


நேற்று காலை நிர்ணயிக்கப்பட்ட விலையின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.54-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.34-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 


தினசரி காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிறவற்றைச் சேர்த்த பிறகு, அதன் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.


கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று வீழ்ச்சியை கண்டாலும், மே மாதம் 4 ஆம் தேதியில் இருந்து எரிபொருள் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.


Also Read | ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR