Petrol Price Today March 13, 2021: 14 வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இல்லை
நாட்டின் முக்கிய நகரங்களில் சனிக்கிழமை தொடர்ந்து பதினான்காவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ .93.11 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .86.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி: நாட்டின் முக்கிய நகரங்களில் சனிக்கிழமை தொடர்ந்து பதினான்காவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ .93.11 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .86.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது மக்களை பெரும் அளவில் அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது. உலக அளவிலும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதாலும், டாலர் மதிப்பில் நிலைத்தன்மை இல்லாததாலும், எரிபொருள் விலை மக்களின் கையை மீறி அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாக அதிக வேறுபாடு இலை என்றாலும், ஏற்கனவே விலைகள் விண்ணைத் தொட்டு விட்டன.
பெருநகரங்களில் பெட்ரோல் விலை (Petrol Price Today) மிக அதிகமாகியுள்ளது. உதாரணமாக, டெல்லியில் வசிக்கும் ஒருவர், அண்டை மாநிலங்களை விட பெட்ரோலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால், டெல்லியில் ஏற்பட்டுள்ள வினோதமான நிலையை இங்கே காணலாம்.
டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் ஹர்யானா மாநிலங்களை அண்டை மாநிலங்களாகக் கொண்டுள்ளது. எனினும், இவ்விரு மாநிலங்களில் கிடைப்பதை விட, டெல்லியில் பெட்ரோல் விலை அதிகமாகவே உள்ளது.
டெல்லியில் பெட்ரோல் (Petrol) விலை அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர் மற்றும் பெட்ரோல் பம்ப் உரிமையாளர் என அனைவருக்கும் அது பிரச்சனையாகி உள்ளது. உ.பி. அல்லது ஹரியானா எல்லையைச் சுற்றி வசிப்பவர்கள் மலிவான பெட்ரோலை பெற்று விடுகிறார்கள். ஆனால் மத்திய டெல்லியில் வசிப்பவர்களுக்கு இந்த நிவாரணம் கிடைப்பதில்லை.
பிப்ரவரி 27 முதல் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் கடந்த வாரம் பெரும் நிவாரணம் கிடைத்தது. வாரம் முழுவதும் எண்ணெய் விலையில் எந்த வித்தியாசமும் இல்லை. உ.பி.யில் தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .89.38 ஆகவும், டெல்லியில் ரூ .91.17 ஆகவும் உள்ளது. அதாவது டெல்லியில் பெட்ரோல் விலை உ.பி.யை விட லிட்டருக்கு ரூ .1.79 அதிகமாக உள்ளது.
உ.பி.யைத் தவிர, ஹரியானாவிலும் டெல்லியை விட மலிவு விலையில் பெட்ரோல் கிடைக்கிறது. ஹரியானாவிலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .89.38 ஆக உள்ளது. டெல்லியில் இதைவிட லிட்டருக்கு ரூ .1.79 அதிகமாக விற்கப்படுகிறது. டெல்லியில் தற்போது லிட்டருக்கு ரூ .91.17 என்ற விலையில் பெட்ரோல் கிடைக்கிறது.
டெல்லி-என்.சி.ஆரில், லட்சக்கணக்கான மக்கள் வேலை தொடர்பாக மற்ற மாநிலங்களுக்கு செல்கிறார்கள். சிலர் டெல்லியில் இருந்து நோய்டாவுக்கோ, குருகிராமிற்கோ அல்லது ஃபரிதாபாதிற்கோ பணி நிமித்தமாக செல்கிறார்கள். இந்த பகுதிகளிலிருந்து அலுவலகங்களுக்கு டெல்லி வருபவர்களும் அதிகம் உள்ளனர். முன்னர் இவர்கள் டெல்லியில் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது ஹரியானா அல்லது உ.பியில் பெட்ரோல் போடுவதை தேர்ந்தெடுகிறார்கள். இதன் காரணமாக டெல்லியில் உள்ள பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் தினமும் லட்சக்கணக்கான வருவாயை இழக்க நேரிடுகிறது.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது டெல்லியில் பெட்ரோல் விலை அதிகமாக விற்கப்படுகிறது, ஆனால் டீசல் விலை சற்று மலிவானது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ .81.47 ஆகவும், உ.பி.யில் டீசல் விலை லிட்டருக்கு ரூ .81.91 ஆகவும் உள்ளது.
உ.பி.யுடன் ஒப்பிடும்போது டீசல் (Diesel) டெல்லியில் 44 பைசா மலிவாக உள்ளது. இது டெல்லி மக்களுக்கு ஒரு சிறிய நிவாரணமாகும். ஹரியானாவில் டீசல் விலை லிட்டருக்கு 82.30 ரூபாய். அதன்படி, டெல்லியில் ஹரியானாவை விட டீசல் லிட்டருக்கு 83 பைசா மலிவாக கிடைக்கிறது.
ALSO READ: Petrol Diesel Prices: மலிவாகப்போகிறது பெட்ரோல்-டீசல் விலை! அரசாங்கத்தின் முடிவு என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR