பெட்ரோல்-டீசல் விலை குறையுமா; பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல்-டீசல்-எல்பிஜி விலை அதிகரித்து வருவது தொடர்பாக மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்ததால் ((Petrol-Diesel Price) பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையிலான தக்வல் வந்துள்ளது. அடுத்த சில நாட்களில் அதன் விலைகள் குறையலாம். மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரவிருக்கும் காலங்களில் பெட்ரோலியம் விலை குறையலாம் எனக் கூறியுள்ளார்.
பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமையன்று, 'பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி விலைகள் (பெட்ரோல்-டீசல் விலை) இப்போது குறைந்து வருகின்றன. இது வரும் நாட்களில் மேலும் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால், அந்த விலை குறைப்பை பயன்படுத்திக் கொண்டு, சாதாரண மக்கள் பயனடையும் வகையில், விலைகள் குறைக்கப்படும் என்றும் நாங்கள் முன்பு கூறியிருந்தோம்” என்றார்.
முன்னதாக, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல்-டீசல்-எல்பிஜி விலை அதிகரித்து வருவது தொடர்பாக மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மக்களவையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது, கடந்த 7 ஆண்டுகளில் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்.
எல்பிஜி எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வதற்கான காரணங்கள் குறித்து பெட்ரோலிய அமைச்சர் மக்களவையில் தகவல் கொடுத்தார். எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியம் படிப்படியாக நீக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த சில மாதங்களில் எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரிக்க இதுவே காரணம். 2020 டிசம்பரில் எல்பிஜி விலை சிலிண்டருக்கு ரூ .594 ஆக இருந்தது. தற்போது எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .819 ஆக உள்ளது.
ALSO READ | Gold Rates Today: தங்கம் வாங்க இது நல்ல நேரமா? இன்றைய விலை நிலவரம் இதோ
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR