EPF Balance Check: மக்கள் நலனுக்காக பல வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் பிஎஃப் திட்டமும் மிக முக்கியமான ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதன் கீழ், நிறுவனம் மற்றும் பணியாளரின் பங்கு டெபாசிட் செய்யப்படுகிறது. அதே சமயம், சமீப காலமாக, சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் பிஎஃப் தொகையை பிடித்தம் செய்தும், இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யாமல் இருப்பது போன்ற பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகார் செய்யலாம்


பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு விவரங்கள் மூலம் சில மாதங்களாக எந்த பங்களிப்பும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தால், உடனடியாக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் முதலாளி / நிறுவனம் தங்கள் பங்கு தொகையை டெபாசிட் செய்யாமல் இருக்கலாம். அப்படி இருந்தால், அது குறித்து நீங்கள் புகார் அளிக்கலாம். 


பணியாளர் வருங்கால வைப்புத் தொகை (EPF)


ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யத் தவறிய நிறுவனங்கள் குறித்து பல செய்திகள் வருகின்றன. உங்கள் EPF கணக்கில் EPF பங்களிப்பு வரவு வைக்கப்படவில்லை என நீங்கள் உணர்ந்தால், அதைப் பற்றி புகார் செய்யலாம். ஒரு பணியாளரின் சம்பளத்திலிருந்து இபிஎஃப் -க்கான தொகை கழிக்கப்பட்டு, முதலாளி /  நிறுவனம் அதை பணியாளரின் EPF கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றால், பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு (EPFO) உடனடியாக அதை தெரிவிக்க வேண்டும்.


மேலும் படிக்க | தீபாவளிக்கு முன்னாடியே வரும் பரிசு... மக்களுக்கு நல்ல செய்தியை அறிவித்த மத்திய அரசு!


பிஎஃப் தொகை


ஊழியர் EPFIGMS போர்ட்டலில் புகார் அளிக்கலாம் அல்லது பிஎஃப் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம். EPFO இன் புகார் இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்ய, ஊழியர், இபிஎஃப் கழிக்கப்பட்டு, அது இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படாததற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். இதற்கு ஊழியர் தனது சேலரி ஸ்லிப் அதாவது சம்பள சீட்டு மற்றும் இபிஎஃப் விவரங்களை வழங்கலாம். இதன் மூலம் தொகை முதலாளி / நிறுவனம் மூலம் ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டதும், ஆனால் இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படாததும் தெரியவரும். 


கூடுதல் தகவல்


பிபிஎஃப் கணக்கைத் திறப்பவர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதியில் கணக்கு தொடங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படி என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது பிஎஃப் சந்தாதாரர்கள் இரட்டிப்பு வட்டியின் பலனைப் பெறலாம். இது குறித்த தகவல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வித சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும் இன்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிபிஎஃப் திட்டம்) பணத்தை முதலீடு செய்ய சிறந்த வழியாக உள்ளது. இதில், சிறந்த வருமானத்துடன், முதிர்ச்சியில் பெரும் பலனும் கிடைக்கும். இரட்டிப்பு வட்டியின் பலனை சந்தாதாரர்கள் எப்படி பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 


1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கிடைக்கும்


PPF முதலீடு E-E-E பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றும் முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். நீங்கள் PPF திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: 46% டிஏ... ஊதிய உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ