உங்களிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கான சரியான விருப்பத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த செய்தியை கட்டாயம் ஒருமுறை படிக்கவும். இந்த திட்டத்தில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் நீங்கள் சிறந்த லாபத்தைப் பெறுகிவீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக அஞ்சல் துறையின் தொடர்வைப்புக் கணக்குக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். ஏனெனில் அஞ்சலக துறையானது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு அமைப்பாகும். அதோடு இன்றைய காலகட்டத்தில் முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதத்தினை குறைவாகத் தான் வழங்கி வருகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் என்பது அதிகம் எனலாம். எளிதிலும் அணுக முடியும் என்பதால், இன்றளவிலும் அஞ்சலக திட்டங்கள் நல்லதொரு ஆப்சனாக பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஊழியர்கள் கவனத்திற்கு! EPFO கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை!


அதுவும் போஸ்ட் ஆபீஸ் FD திட்டம் எப்போதும் ஒரு நல்ல பாதுகாப்பான தேர்வாக இருக்கும். FD என்பது நிலையான வைப்புத்தொகை ஆகும், அதன்படி பல வங்கியில் FD திட்டம் இருந்தாலும் போஸ்ட் ஆபிஸ் எஃப்டி திட்டம் என்று கூறலாம். போஸ்ட் ஆபிஸ் எஃப்டி திட்டமானது போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் என்றும் அழைக்கப்படுகிறது. அஞ்சல் அலுவலகத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு FD கணக்கு விருப்பத்தை நீங்கள் பெறுவீர்கள். அந்த வகையில் 10 வருடங்கள் இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், உங்கள் தொகையை இரட்டிப்பாக்கலாம். தற்போது, ​​5 ஆண்டு கால எப்டிக்கு போஸ்ட் ஆபீஸில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.


இரண்டு மடங்கு அதிக பணம் சம்பாதிப்பது எப்படி:
தற்போது, ​​தபால் அலுவலக FDக்கு 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது. அதன்படி நீங்கள் தபால் அலுவலகத்தில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், அதன் பிறகு 7.5 சதவிகிதம் வட்டியாக ரூ.2,24,974 லட்சம் கிடைக்கும். இந்த வழியில், 5 ஆண்டுகளில், உங்களுடைய இந்தத் தொகை ரூ.7,24,974 ஆக மாறும். இப்போது நீங்கள் அதை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், இந்த தொகை ரூ 10,51,175 ஆக மெச்சூரிட்டி அடையும், இது இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகும்.


ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை FD மீதான வட்டி:
1 வருடத்திற்கு FDக்கு - 6.9%
2 ஆண்டுகளுக்கு FDக்கு - 7.0%
3 ஆண்டுகளுக்கு FDக்கு - 7.0%
5 ஆண்டுகளுக்கு FDக்கு - 7.5%


மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம்:
அதேபோல் நீங்கள் மூத்த குடிமக்களாக இருந்து நல்ல FD திட்டத்தில் டெபாசிட் செய்ய விரும்பினார், போஸ்ட் ஆபீஸ் SCSS ஸ்கீம் திட்டத்தில் (Post Office SCSS Scheme) முதலீடு செய்யலாம். இதில், முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8 சதவீதத்துக்கும் மேல் வட்டி தரப்படுகிறது. இதில் கணக்கு தொடங்கினால், குறைந்தது ரூ.1,000-ல் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
ஒன்றாக டெபாசிட் செய்யப்பட்ட பணம்: ரூ. 5 லட்சம்
வைப்பு காலம்: 5 ஆண்டுகள்
வட்டி விகிதம்: 8.2%
முதிர்வுத் தொகை: ரூ.7,05,000
வட்டி வருமானம்: ரூ 2,05,000
காலாண்டு வருமானம்: ரூ 10,250. 


மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ