மூத்த குடிமக்களுக்கு அசத்தல் திட்டம்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம், நிம்மதியான வாழ்க்கை
Senior Citizen Savings Scheme: அரசாங்கம் மூத்த குடிமக்களுக்காக பல பிரத்யேக முதலீட்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மிக பிரபலமான ஒரு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS).
Senior Citizen Savings Scheme: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணத்தை சேமிப்பதும், முதலீடு செய்து பெருக்குவதும் முக்கியமாகும். வயதிற்கு ஏற்ப பணத்திற்கான நமது தேவையும் மாறுகிறது. இளமையில் இருப்பது போல முதுமையில் நம்மால் ஓடி ஆடி பணம் சேர்க்க முடிவதில்லை. ஆகையால், முதுமையில் முதலீடு செய்து பணம் ஈட்டுவது பாதுகாப்பான வழியாக பார்க்கப்படுகின்றது.
SCSS: மாத வருமானத்திற்கு சிறந்த வழி
அரசாங்கம் மூத்த குடிமக்களுக்காக பல பிரத்யேக முதலீட்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மிக பிரபலமான ஒரு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS). அஞ்சல் அலுவலகம் இந்த திட்டத்தை வழங்குகிறது. இதில் முதலீட்டாளர்களுக்கு மாதா மாதம் வருமானம் கிடைக்கும். ஓய்வுக்குப் பிறகு வழக்கமான மாத வருமானம் குறித்த கவலையிலிருந்து விடுபட தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் சிறந்த வழியாக இருக்கும். இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மாத வருமானத்தை உறுதி செய்கிறது. பணி ஒய்வு பெற்று, பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
மாதா மாதம் 20,500 ரூபாய் வருமானம் கிடைக்கும்
SCSS இல் தற்போதைய வட்டி விகிதம் 8.2% ஆகும். இது அரசாங்க திட்டங்களிலேயே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.20,500 வடிவில் இந்தத் தொகையைப் பெற முடியும். இந்தப் பணம் நேரடியாக முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
SCSS: முதலீட்டு வரம்பு மற்றும் கால அளவு
- முன்னதாக இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. இது இப்போது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். முதிர்ச்சியடைந்த பிறகு மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டிக்க முடியும்.
SCSS: இதில் யார் முதலீடு செய்யலாம்?
- 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்தச் சலுகையைப் பெறலாம்.
- இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க, அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கியில் விண்ணப்பிக்கலாம்.
SCSS: வரி சலுகைகள் மற்றும் நன்மைகள்
- இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இருப்பினும், சில வரி சேமிப்பு வசதிகள் SCSS இன் கீழ் கிடைக்கின்றன. இது உங்கள் வரிப் பொறுப்பைக் குறைக்கும்.
SCSS: இந்த திட்டத்தின் நன்மைகள்
- பாதுகாப்பான முதலீடு: அரசு இத்திட்டத்தை தொடங்கியுள்ளதால், இது முற்றிலும் பாதுகாப்பானது.
- நிலையான மாத வருமானம்: ஓய்வுக்குப் பிறகு, வழக்கமான செலவுகளுக்கு ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளருக்கு நிலையான வருமானம் கிடைக்கும்.
- வட்டி விகிதம்: நீங்கள் 8.2% வட்டி பெறுவீர்கள். இது ஒப்பீட்டளவில் மிக அதிக வட்டியாகும்.
- நெகிழ்வுத்தன்மை: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு காலத்தை நீட்டிக்கலாம்.
SCSS: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், அதன் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் புரிந்துகொள்வது அவசியமாகும். இந்தத் திட்டம் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் ஓய்வுக்குப் பிறகு வசதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது சரியான தேர்வாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ