PPF account: பிபிஎஃப் கணக்குதாரர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்கு முன் மத்திய அரசின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்தால், அந்த மாதம் முழுவதும் வட்டியினை பெறலாம்.  ஒரு முதலீட்டாளர் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை ரூ.1.5 லட்சம் முழுவதையும் டெபாசிட் செய்தால் அவருக்கு 5 ஆம் தேதிக்கு முன் செலுத்தப்பட்ட பங்களிப்புடன் சேர்க்கப்பட்ட வட்டியின் பலன் கிடைக்கப்பெறும்.  பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதம் மாதத்தின் 5 ஆம் தேதிக்கும் மாதத்தின் கடைசி நாளுக்கும் இடையே உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகையில் கணக்கிடப்படுகிறது.  எனவே ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்கு முன் பணத்தை டெபாசிட் செய்தால் அவர்களுக்கு அந்த மாதம் முழுவதும் வட்டி கிடைக்கும்.  அதுவே மாதத்தின் 5 ஆம் தேதிக்குப் பிறகு டெபாசிட் செய்தால் அந்த மாதம் முழுவதும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வட்டி குறைந்து பண இழப்பு ஏற்பட்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், நிதி அமைச்சகம் புதிய அப்டேட் வெளியீடு



பிபிஎஃப் திட்டத்தில் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, ஆனால் நிதியாண்டின் இறுதியில் அதாவது மார்ச் 31 ஆம் தேதி வட்டி முதலீட்டாளருக்கு வரவு வைக்கப்படும்.  முதலீட்டாளர் ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு முன் ரூ. 1.5 லட்சத்தை கணக்கில் டெபாசிட் செய்யும் போது, ​​ஏப்ரல் 5 முதல் மாத இறுதிக்குள் மிகக் குறைந்த கணக்கு இருப்புக்கு 7.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.  விதிகளின்படி நிதியாண்டின் இறுதியில், ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு முன் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.1.5 லட்சத்திற்கு ரூ.10,650 வட்டி கிடைக்கும்.  ஆனால் ஏப்ரல் 5 க்குப் பிறகு டெபாசிட் செய்தால் வட்டி கிடைக்காது.  தற்போதைய 7.1 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 1.5 லட்சம் டெபாசிட்டுக்கு ரூ.9,762.50 வருமானமாக இருக்கும்.


பிபிஎஃப் திட்டம் 15 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது.  இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள்  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை என 15 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்தால், ஒவ்வொரு வருடமும் ரூ. 18,18,209 வருமானமும், 15 ஆண்டுகளின் முடிவில் முதிர்வுத் தொகையாக ரூ.40,68,209 கிடைக்கும்.  ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்பவர்களுக்கு வருடத்தில்   ரூ.18,18,209க்கு பதிலாக ரூ.15,48,515 வருமானமும், முதிர்வுத் தொகையானது ரூ.40,68,209க்கு பதிலாக ரூ.37,98,515 கிடைக்கும்.  முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்கு முன் பிபிஎஃப் கணக்கில் ரூ.12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டு முதிர்வுக்கு பிறகு அவருக்கு ரூ.39,44,599 கிடைக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம் விரைவில், கணக்கீடு இதோ!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ