Pradhan Mantri Jan Arogya Yojana: மத்திய அரசு நாட்டு மக்களின் நன்மைக்காக பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அதில் ஒரு முக்கியமான திட்டம் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா. பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் இதுவரை 85.97 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்புள்ள இலவச சிகிச்சைகளால் பயனடைந்துள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா


2018 இல் தொடங்கப்பட்ட PMJAY, ஏழை கிராமப்புற குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இதன் கீழ் நகர்ப்புற தொழிலாளர்களின் குடும்பங்களின் தொழில் வகைகளும் அடையாளம் காணப்பட்டு உதவி அளிக்கப்படுகின்றது. இது உலகின் மிகப்பெரிய சுகாதார உறுதித் திட்டமாகும். இது ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை விரிவான இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை சலுகைகளை வழங்குகிறது.


PMJAY


ஜனவரி 29 ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக PMJAY டேஷ்போர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், 90,49,496 பேர் சலுகைகளைப் பெறுகின்றனர். அதைத் தொடர்ந்து கர்நாடகா (66,04,849), ராஜஸ்தான் (57,41,363), கேரளா (54,64,674), ஆந்திரப் பிரதேசம் (49,67,217) மற்றும் குஜராத் (45,46,832) ஆகிய மாநிலங்கள் உள்ளன. லட்சத்தீவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனாளிகள் (780) உள்ளனர்.


PM-JAY திட்டம்: முக்கிய அம்சங்கள்


- PM-JAY திட்டத்தில் குடும்ப அளவு அல்லது வயதுக்கு எந்த வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


- திட்டத்தில் சேர்வதற்கு முன், ஏற்கனவே உள்ள நோய்கள் முதல் நாளிலிருந்தே காப்பீடு செய்யப்படுவதையும் இந்த திட்டம் உறுதி செய்கிறது. 


- இதனால் நோயாளிகள் பதிவு செய்தவுடன் உடனடியாக சிகிச்சை பெறும் வசதியை பெறுகிறார்கள். 


- மருந்துகள், பொருட்கள், நோயறிதல் சேவைகள், மருத்துவர் கட்டணம், அறை கட்டணம், அறுவை சிகிச்சை மருத்துவர் கட்டணங்கள், OT மற்றும் ICU கட்டணங்கள் உள்ளிட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய பல்வேறு நடைமுறைகள் இந்த சேவைகளில் அடங்கும்.


இந்த கூடுதல் சேவைகளும் இதில் கவர் செய்யப்படுகின்றன


- மருத்துவ பரிசோதனைகள், 
- சிகிச்சை மற்றும் ஆலோசனைகள்,
- மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய செலவுகள், 
- மருந்து மற்றும் மருத்துவ நுகர்பொருட்கள்,
- தீவிரமற்ற மற்றும் தீவிர சிகிச்சை சேவைகள்,
- நோயறிதல் மற்றும் ஆய்வக விசாரணைகள்,
- மருத்துவ உள்வைப்பு கருவிகளுக்கான செலவுகள்,
- தங்குமிடம் மற்றும் உணவு செலவுகள்,
- சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்களுக்கான செலவுகள்
- மற்றும் 15 நாட்களுக்கு போஸ்ட்-ஹாஸ்பிடலைசேஷன் ஃபாலோ அப்


Ayushman Cards: ஆயுஷ்மான் அட்டைகள் 


பயனாளிகளுக்கு இதுவரை 365.4 மில்லியனுக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக டேஷ்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது. PM-JAY இன் கீழ் 31,077 பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆயுஷ்மான் அட்டைகள் (5,19,78,317) அளிக்கப்பட்டுள்ளன. லட்சத்தீவில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக (35,343) உள்ளன. 


Ayushman Vay Vandana scheme


பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 29 அன்று, முதன்மையான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் நீட்டிப்பாக, ஆயுஷ்மான் வே வந்தனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த புதிய திட்டம், தற்போதுள்ள AB PM-JAY குடும்பத் திட்டத்துடன் கூடுதலாக, மூத்த குடிமக்களுக்கு இலவச சுகாதாரப் பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ், முதியவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் தனி காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Budget 2025: புதிய வரி முறையில் வரி செலுத்துவோர் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள்


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 25%-35% ஊதிய உயர்வு, ஓய்வூதியத்திலும் மெகா ஏற்றம், குஷியில் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ