PM Jan Dhan Yojana: ஜன் தன் திட்டத்தில் உள்ள மறைமுக நன்மைகளின் பட்டியல் இதோ
Pradhan Mantri Jan Dhan Yojana: இந்த திட்டத்தின் பலன்கள் பற்றி பலருக்கு நன்றாக தெரியும். எனினும், இதன் பல மறைமுக நன்மைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியாத நிலை உள்ளது.
Pradhan Mantri Jan Dhan Yojana: மோடி அரசாங்கம் பொதுமக்களுக்காக பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY). இந்த திட்டத்தின் பலன்கள் பற்றி பலருக்கு நன்றாக தெரியும். எனினும், இதன் பல மறைமுக நன்மைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியாத நிலை உள்ளது. இந்த திட்டத்தை பற்றி குறைவாக அறியப்பட்ட பலன்களை அரசாங்கம் அதன் சந்தாதாரர்களுக்காக பகிர்ந்துள்ளது.
PMJDY திட்டம் என்றால் என்ன?
PMJDY என்பது இந்தியாவில் உள்ள வங்கியில்லாத அனைத்து நபர்களுக்கும் அடிப்படை வங்கிக் கணக்கை வழங்கும் திட்டமாகும்.
மாநிலங்காளவையில் அளிக்கப்பட்ட பதில்
மாநிலங்காளவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய தொடர் கேள்விகளுக்கு நிதி அமைச்சகம் சமீபத்தில் பதிலளித்தது. PMJDY திட்டத்தின் கீழ் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை, மாநில வாரியான பயனாளிகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் விபத்து காப்பீடு மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதி போன்ற பலன்கள் பற்றிய விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கோரினார்.
நர்ஹரி அமீன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, PMJDY பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
நவம்பர் 13, 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் PMJDY இன் கீழ் மொத்தம் 53.99 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் மட்டும் 1.90 கோடி கணக்குகள் உள்ளன.
பலருக்கு தெரியாத PMJDY இன் நன்மைகள்
- இந்தத் திட்டம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதியை வழங்குகிறது.
- இந்த திட்டத்தின் மூலம் தேவைப்படுபவர்களுக்கு நிதி உதவி கிடைக்கிறது.
- கூடுதலாக, அனைத்து PMJDY கணக்கு வைத்திருப்பவர்களும் இலவச RuPay டெபிட் கார்டைப் பெறுகிறார்கள்.
- இது ரூ.2 லட்சம் வரை உள்ளடங்கிய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துடன் வருகிறது.
- காப்பீட்டுப் பலன்களைப் பெற, கார்டுதாரர்கள் தங்கள் ரூபே கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம், இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் அல்லது பிஓஎஸ் டெர்மினல் போன்ற எந்தவொரு சேனலிலும் குறைந்தது ஒரு வெற்றிகரமான நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனையை செய்ய வேண்டும்.
- இந்த பரிவர்த்தனை விபத்துக்கு 90 நாட்களுக்கு முந்தைய 90 நாட்களுக்குள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
PMJDY இன் பிற முக்கிய விவரங்கள்
PMJDY என்பது, அடிப்படை சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, மலிவு விலையில் ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான நிதிச் சேர்க்கைக்கான தேசிய மிஷனாகும். இத்திட்டத்தின் கீழ், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கை எந்த வங்கிக் கிளையிலும் அல்லது வணிக நிருபர் (வங்கி மித்ரா) அவுட்லெட்டிலும், வேறு கணக்கு இல்லாத நபர்கள் தொடங்கலாம்.
PMJDY கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம் (DBT), பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), அடல் பென்ஷன் யோஜனா (APY), மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் & ரிஃபைனான்ஸ் ஏஜென்சி வங்கி (MUDRA) திட்டத்திற்குத் தகுதியுடையவை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ