வரவிருக்கும் நாட்களில் ரயில்வேயில் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களின் தேவையை பூஜ்ஜியமாக்குவதே தனது திட்டம் ரயில்வே வாரியத்தின் தலைவர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இனி இந்தியாவில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் 'மேட் இன் இந்தியா' (Made in India) கூறுகளால் ஆனா இயந்திரங்களால் இயங்கும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களை அகற்றிவிட்டு உள்நாட்டு தொழில்துறையை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தியன் ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ், 'வரவிருக்கும் நாட்களில் ரயில்வேயில் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களின் தேவையை பூஜ்ஜியமாக்குவதே' தனது திட்டம் என்று அப்பட்டமாகக் தெரிவித்துள்ளார்.


இந்தியன் ரயில்வே மேலும் மேலும் திறமையாகி வருவதாக யாதவ் வலியுறுத்தினார். இந்தியன் ரயில்வே உள்நாட்டில் தயாரிக்கப்படும் லோகோக்கள் மற்றும் ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்துள்ளது. வீடியோ கான்பரன்சிங்கின் போது ரயில்வேயில் ஒரு சீன நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறுத்தப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த யாதவ், ரயில்வேயில் உள்ள பெரும்பாலான ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன, அவை அப்டியே தொடரும் என அவர் கூறியுள்ளார். 


READ | ‘மக்களிடம் உண்மையை கூறுங்கள்’; பிரதமரிடம் சோனியா காந்தி வலியுறுத்தல்!


இந்தியன் ரயில்வே திட்டங்களில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக யாதவ் தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளார். கடந்த 2-3 ஆண்டுகளில், வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் இறக்குமதி செய்வதைக் குறைக்க ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று வாரியத் தலைவர் தெரிவித்தார். மேக் இன் இந்தியா என்ற கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எடுத்துக்காட்டாக, சிக்னல் அமைப்பில், மேக் இன் இந்தியாவுடன் குறைந்தபட்சம் 70% உபகரணங்களை வைத்திருப்பதை ரயில்வே கட்டாயமாக்கியுள்ளது. எங்கள் முயற்சி ரயில்வே வரும் நாட்களில் ஏற்றுமதியாளராக மாறும் என்றார். 


கடந்த வியாழக்கிழமை, ரயில்வே சிக்னலிங் துறையில் பணிபுரியும் சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை சீன மோசமான செயல்திறனின் அடிப்படையில் ரயில்வே ரத்து செய்தது. கான்பூர் முதல் முகலசராய் வரை 473 கி.மீ தூரத்தில் வேலை செய்ய ரூ .1471 கோடி ரூபாய் ஒப்பந்தம் கிடைத்தது. இந்நிறுவனம் நான்கு ஆண்டுகளில் 20% மட்டுமே செயல்பட முடிந்தது. எதிர்வரும் நாட்களில், எந்தவொரு ரயில்வே திட்டத்திலும் சீன நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.