இந்தியன் ரயில்வே ரயில்களில் இருந்து ஜெனரேட்டர் கார்களை படிப்படியாக குறைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் பயணிகளுக்கு சுமார் 20 ஆயிரம் இருக்கைகள் / பெர்த்த்களை உருவாக்க இயலும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தற்போது, ​​500-க்கும் மேற்பட்ட ரயில்களில் இரண்டு இணைக்கப்பட்ட ஜெனரேட்டர் கார் போகிகள் உள்ளன. இந்த ரயில்களில் இருந்து ஒரு ஜெனரேட்டர் காரை ரயில்வே துறை முதல் கட்டத்தில் வெளியேற்றும். இதன் மூலம் ஜெனரேட்டர் காருக்கு பதிலாக, பயணிகளின் இடங்களுக்கு அதிகளவில் இடமளிக்க முடியும், அதாவது பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் கிடைப்பது மேலும் அதிகரிக்கப்படும்.


ஒற்றை ஜெனரேட்டர் கார் முறை சத்தமில்லாத கார் முறை என்றும், இந்த திட்டத்தின் மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ .800 கோடி லாபம் கிடைக்கும் எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்திய ரயில்வே தனது பிராட் கேஜ் நெட்வொர்க்கில் 100 சதவீதத்தை மின்மயமாக்குவதற்கான ஒரு பெரிய மின்மயமாக்கல் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, முன்னர் மின்சார உபகரணங்கள், விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் ரயிலின் இயக்கத்திற்கான பிற பிரதான தேவைகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மின் பெட்டிகள் இப்போது பயணிகள் பெட்டிகளாக மாற்றப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் தொடர்பான ரயில் பயணிகளின் துயரங்களையும் இது தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இது பயணிகளுக்கு கிட்டத்தட்ட 144 பெர்த்த்களை உருவாக்க வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் பொருள், அதிக காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளை பயணிகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளாக மாற்ற இயலும் என்பதாகும்.


பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதற்காக, இந்திய ரயில்வே சமீப காலங்களில் முக்கிய நிலையங்களில் லிஃப்ட் / எஸ்கலேட்டர்கள், பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கு இயந்திரங்கள், இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு மற்றும் பராமரிப்பு பணியாட்கள் போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது இருக்கை/ பெர்த்துகளை அதிகரிக்கும் விதமாக தற்போது ஜெனரேட்டர் கார்களை படிப்படியாக குறைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.