வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்த வாரத்தில் ஏதேனும் வேலைக்காக வங்கிக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால் இந்த செய்தியை கவனமாக படியுங்கள்.  இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த வாரம் 7 முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.  வங்கிகள் மூடப்பட்டிருக்கும் நாளில் நீங்கள் வங்கிக்கு சென்றால் உங்களுக்கு தான் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும்.  வங்கியில் ஏதேனும் முக்கியமான வேலையை முடிக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்கள் பகுதியிலுள்ள வங்கிகள் திறக்கப்பட்டிருக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள்.  வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாத வகையில், வங்கி விடுமுறை பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியால் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு இல்லையா? கவலை வேண்டாம்! ஆதார் மூலம் UPI ஆக்டிவேட் செய்யலாம்!


 


ஜனவரி 2023-ல் வங்கி விடுமுறைகள்


23 ஜனவரி 2023- திங்கள்- (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி அன்று அசாமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
25 ஜனவரி 2023- புதன் - (இமாச்சலப் பிரதேசத்தின் மாநில நாள் காரணமாக விடுமுறை அளிக்கப்படும்)
26 ஜனவரி 2023- வியாழன்- (குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
28 ஜனவரி 2023- நான்காவது சனிக்கிழமை
29 ஜனவரி 2023- ஞாயிறு



ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் என்பதால் அசாமில் வங்கிகள் மூடப்படும்.  அடுத்ததாக இது தவிர, இமாச்சலப் பிரதேசத்தில் மாநில தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதியன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.  அதனை தொடர்ந்து ஜனவரி 26-ம் தேதியன்று குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.  நீங்கள் வங்கி விடுமுறைகள் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள விரும்பினால் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx என்கிற பக்கத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.  ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது பற்றிய தகவல்களை நீங்கள் இதில் தெரிந்துகொள்ளலாம்.  மேற்கண்ட தேதிகளில் வங்கிகள் மட்டும் தான் மூடப்பட்டு இருக்குமே தவிர, ஆன்லைன் சேவைகளுக்கு எவ்வித தடையும் கிடையாது.  நெட் பேங்கிங் உட்பட எந்தவொரு வங்கியின் ஆன்லைன் சேவைகளையும் தெடர்ந்து 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | திருமணமானவர்களுக்கு மாதம் ரூ.18,500 வழங்கும் மத்திய அரசு! இதை மட்டும் செய்தால் போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ