RBI Update: வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. ஒரு நபரின் கடன் தகவல் அறிக்கையை (Credit Information Report - CIR) வங்கி அல்லது NBFC நிறுவனம் எடுக்கும் போதெல்லாம், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் அதைப் பற்றி அந்த நபருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வங்கி அனைத்து கடன் தகவல் நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி இந்த முடிவை ஏன் எடுத்தது?


கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார் நிவர்த்தி செயல்முறையை மேம்படுத்த மத்திய வங்கியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​ஒருவர் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளில் இருந்து சலுகைகள் மற்றும் கடன்களுக்கான அழைப்புகளைப் பெறுவது அடிக்கடி நடக்கிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், கடன் தகவல் நிறுவனம் அந்த நபரின் கடன் அறிக்கையை வங்கிகளுடன் பகிர்ந்து கொள்கிறது. இது குறித்த தகவல்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு கூட தெரியாது.


கிரெடிட் பீரோவிற்கு நிலுவை தொகையைப் பற்றிய தகவலை வழங்கும்போது வங்கி எச்சரிக்கை செய்தியை அனுப்பும்


புதிய விதியின்படி, வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் உட்பட அனைத்து கடன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் கடன் மற்றும் செலுத்த வேண்டிய தொகை பற்றிய தகவலை கடன் நிறுவனங்களுக்கு கொடுக்கும்போது எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தவும், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை இணைப்பதன் நன்மைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை தெரிவிக்கவும் வங்கிகள் மற்றும் NBFC -களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க | முதலீட்டாளர்களுக்கு ஐடிபிஐ வங்கியின் தீபாவளி பரிசு... வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!


இப்போது வாடிக்கையாளர்கள் இலவச கடன் அறிக்கையைப் பெறுலாம்


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடன் நிறுவனங்கள் ஒரு காலண்டர் வருடத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்களுக்கு (கிரெடிட் ஹிஸ்டரி உள்ளவர்கள்) இலவச கடன் அறிக்கையை (Credit Report) வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இதற்காக, வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் ஒரு இணைப்பையும் வழங்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர் இலவச கடன் அறிக்கையை எளிதாகப் பெறக்கூடிய வகையில் வசதி செய்யப்பட வேண்டும் என ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது.


இந்த புதிய விதிகளின் சுற்றறிக்கை அக்டோபர் 26 அன்று ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. சுற்றறிக்கை வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த விதிகள் அமலுக்கு வரும்.


அபராதம்


இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது ஆர்பிஐ சார்பில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் புகார் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், தினமும் 100 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் நிறுவங்களிடம் தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) CIBIL, Experian மற்றும் பிற அனைத்து கடன் தகவல் நிறுவனங்களுக்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது. கிரெடிட் ஸ்கோர் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் கேட்கப்படும்போது ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்புவது அவசியம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விழிப்பூட்டல்களை அனுப்ப வேண்டும். 30 நாட்களுக்குள் புகார் தீர்க்கப்படாவிட்டால், நிறுவனங்கள் தினமும் ரூ.100 அபராதம் வழங்கவேண்டும். 


மேலும் படிக்க | 8th Pay Commission ஜாக்பாட் அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 44% ஊதிய உயர்வு... அறிவிப்பு எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ