ரிசர்வ் வங்கி, சமீபத்திய புதுப்பிப்பு: கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு நிதிக்கொள்கை வட்டி விகிதங்களை பல முறை உயர்த்தியது. இதன் காரணமாக பல கடன்களின் வட்டிகள் அதிகரித்தன. இது கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை வெகுவாக பாதித்தது. மேலும், பணவீக்கம் காரணமாக மக்களின் பிரச்சனைகள் இன்னும் அதிகரித்தன. ஆனால் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை மிகவும் சீரானதாக உள்ளது. நீண்ட நாட்களாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. ரிசர்வ் வங்கி விகிதங்களை சமநிலையில் வைத்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 4-6 தேதிகளில் ரிசர்வ் வங்கியின் பண மதிப்பாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முறை ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருமா அல்லது தற்போதைய நிலைப்பாட்டை தொடருமா என்ற பெரிய கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது. 


இம்முறை என்ன மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்


பிப்ரவரி 8 அன்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை 6.5% ஆக உயர்த்தியது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால், அந்த விகிதங்கள் இன்னும் அப்படியே உள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் 6 பேர் கொண்ட எம்பிசிசி கூட்டம் அக்டோபர் 4-6 தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் MPC கூட்டம் நடைபெற்றது. அந்த நேரத்திலும் கொள்கை வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 


இதுமட்டுமின்றி, இந்த முறையும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாகவும், பணவீக்கம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என்றும் பாங்க் ஆப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் பணத்தட்டுப்பாட்டின் நிலமையும் கடுமையாக உள்ளது. பணவீக்கம் குறித்த ரிசர்வ் வங்கியின் மதிப்பீடு சரியாக இருந்தால், மூன்றாம் காலாண்டில் அது 5% -க்கும் அதிகமாக இருக்கும். நான்காவது காலாண்டில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கலாம்.


மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டு தொடர்பான புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


பணவீக்கத்தின் நிலை இதுதான்


காரீஃப் பயிர்கள் மற்றும் குறிப்பாக பருப்பு வகைகள் தொடர்பாக இன்னும் நிச்சயமற்ற நிலை இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) 6.83 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜூலையில் இது 7.44 சதவீதமாக இருந்தது. ஆனால் இதற்குப் பிறகும் இது ரிசர்வ் வங்கியின் ஆறு சதவீத திருப்திகரமான அளவை விட அதிகமாகவே உள்ளது. இதனுடன், பணவீக்கத்தை இரண்டு சதவீதம் குறைத்து, நான்கு சதவீதமாக வைத்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனுடன், ஐசிஆர்ஏ லிமிடெட் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர், செப்டம்பர் மாதத்தில் சிபிஐ அடிப்படையிலான பணவீக்கம் 5.3 முதல் 5.5 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இதன் பிறகு, MPC அக்டோபர், 2023 கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது.


இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் பொறுப்பு என்ன?


ரிசர்வ் வங்கியின் வரலாற்றில் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்த முடியாமல் போய் அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வந்தது இதுவே முதல் முறையாகும். விதிகளின் படி, பணவீக்கத்திற்கான இலக்கை தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக அடையவில்லை என்றால், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க வேண்டும். 2016க்குப் பிறகு ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தை இரண்டு சதவிகிதம் குறைத்து நான்கு சதவிகிதம் வரை குறைக்கும் பணியை மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு வழங்கி இருந்தது. ஆனால், ஆர்பிஐ பல முயற்சிகளை எடுத்த பின்னரும் அதனால் இதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு! இந்த வங்கியில் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ