RBI Latest Update: யுபிஐ மூலம் பண பரிமாற்றம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 நிதியாண்டின் முதல் நிதிக் கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ (RBI) இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இனி வாடிக்கையாளர்கள் UPI -ஐ பயன்படுத்தி தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணத்தை டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி


ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das), மிக விரைவில் ஏடிஎம் இயந்திரத்தை (ATM Machine) பயன்படுத்தி யுபிஐ மூலம் டெபாசிட் செய்யலாம் என கூறினார். பணத்தை டெபாசிட் செய்வது மட்டுமல்லாமல், பிபிஐ கார்டு (PPI Card) வைத்திருப்பவர்களுக்கு பணம் செலுத்தும் வசதியும் அளிக்கப்படும். இது தர்ட் பார்டியின் UPI செயலியின் மூலம் நடக்கும்.


இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள்


- UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி தொடங்கப்பட்டால், பணம் மற்றும் கார்ட் எடுத்துச்செல்லும் தேவை இருக்காது.


- ஏடிஎம் கார்டை நம்முடன் வைத்திருப்பதால் சில சமயங்களில் அது தொலையவும், திருடப்படவும் வாய்ப்புள்ளது.


-  சில நேரங்களில் ஏடிஎம் கார்ட் திருடப்பட்டால், அது பிளாக் செய்யப்பட்ட பிறகும் பணத்தை டெபாசிட் செய்வதில் சிக்கல் ஏற்படாது. 


- இந்த வசதி வந்த பிறகு, பணத்தை டெபாசிட் செய்ய வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.


மேலும் படிக்க | கடந்தாண்டு 17,545 கோடி-இந்த ஆண்டு தெருக்காேடி! பைஜு ரவீந்திரன் சொத்துக்களை இழந்தது எப்படி?


இந்த வசதி எப்போது தொடங்கும்?


மிக விரைவில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) இந்த புதிய UPI வசதியை ATM இயந்திரங்களில் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


UPI -இன் முதன்மை பயன்பாடுகள்


UPI முதன்மையாக பியர்-டு-பியர் பரிவர்த்தனைகள், கட்டணங்கள், பில் பேமெண்ட்கள், வணிகர் பரிவர்த்தனைகள் மற்றும் பிற டிஜிட்டல் கட்டணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இப்போது, புதிதாக வந்துள்ள அறிவிப்பின் மூலம், மக்கள் ஏடிஎம் (ATM) / டெபிட் கார்டு (Debit Card) இல்லாமலேயே தங்கள் UPI -ஐ மட்டும் பயன்படுத்தி பண வைப்பு இயந்திரங்கள் (Cash Deposit Machines) அதாவது சிடிஎம்கள் -களில் (CDM) பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.


UPI முறைமையானது அதன் வசதி, வேகம் மற்றும் இயங்குதன்மை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் குறிப்பிடத்தக்க பிரபலத்தைப் பெற்றுள்ளது. இது பண பரிமாற்றத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் கட்டண முறைமைகளின் வளர்ச்சிக்கு பெரிய பங்களிக்கிறது. 


தற்போது இதில் கூடுதலாக பணம் டெபாசிட் செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.


மேலும் படிக்க | PPF சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி: இந்த ஒரு தவறால் லட்சக்கணக்கில் இழக்கக்கூடும், ஜாக்கிரதை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ