RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 10வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்  பணவியல் கொள்கை குழு (MPC) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மூன்று நாள் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தின் முடிவை இன்று அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு தொடர்ந்து பத்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


"இதன் விளைவாக, SDF எனப்படும் நிலையான வைப்பு வசதி (standing deposit facility ) விகிதம் 6.25 சதவீதமாகவும், MSF எனப்படும் விளிம்பு நிலை வசதி (marginal standing facility) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவீதமாகவும் மாறாமல் உள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வு... அமைச்சரவை கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு: சம்பள உயர்வு கணக்கீடு இதோ


கடன் EMI -இல் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?


ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மாற்றாமல் அப்படியே தொடர முடிவெடுத்துள்ள நிலையில், வங்கியில் நாம் வாங்கியுள்ள கடன்களின் வட்டி, EMI குறையுமா அல்லது கூடுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். RBI ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளதால், இப்போதைக்கு வீட்டுக் கடன் அல்லது பிற கடன்களின் EMI இல் அதிகரிப்பு இருக்காது. 


Repo Rate: ரெப்போ விகிதம் என்றால் என்ன?


ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ஆகும். ரெப்போ விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் நம் அனைவரையும் பாதிக்கும். வீடு அல்லது கார் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு ரெப்போ விகிதம் EMI-யில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ரெப்போ விகிதம் வங்கிகள் கடன் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களிடமிருந்து எவ்வளவு வட்டி வசூலிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.


மேலும் படிக்க | EPFO தீபாவளி பரிசு: அதிக ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் மாற்றம்.... காத்திருக்கும் PF உறுப்பினர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ