நீயா நானா? முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரிய பணக்காரர் பட்டம் வென்றார் கெளதம் அதானி!
Gautam Adani The Richeset: முகேஷ் அம்பானியை தோற்கடித்து நம்பர் 1 கிரீடத்தை வென்ற கௌதம் அதானி ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்தார்...
Bloomberg Billionaires Index: இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் 5.45 பில்லியன் டாலர் அதிகரிப்பு ஏற்பட்டு 111 பில்லியன் டாலர்களை எட்டிய நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். கடந்த சில நாட்களில் கெளதம் அதானியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.
பங்குச்சந்தையில் அதானியின் பங்குகளின் உயர்வு, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கெளதம் அதானியை மாற்றியதால், கௌதம் அதானி நிகர மதிப்பு)மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கெளதம் அதானி - முகேஷ் அம்பானி
ஆசியாவின் பெரிய பணக்காரர் யார் என்பதற்கான போட்டியில், இந்தியாவின் தொழிலதிபர்களுக்கு இடையேயான போட்டியில் அம்பானி-அதானி என்ற பெயர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றன.
கௌதம் அதானியின் நிகர மதிப்பு
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் இன்று பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கௌதம் அதானி பணக்காரர்கள் பட்டியலில் சட்டென்று முன்னேறி, முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் நம்பர் 1 பட்டத்தை வென்றுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் அண்மைப் பட்டியலில் கௌதம் அதானிமேலே சென்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் கௌதம் அதானி 111 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் ஆசியாவிலும், இந்தியாவிலும் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்று (2024 மே 31), அதானியின் நிகர மதிப்பு 5.45 பில்லியன் டாலர்கள் அதிகரித்ததால் அவரது மொத்த நிகர மதிப்பு 111 பில்லியன் டாலர்களை எட்டியது.
முகேஷ் அம்பானியின் சொத்து
முகேஷ் அம்பானி ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடத்திலும், 109 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஆசியாவிலேயே இரண்டாவது இடத்திலும் உள்ளார். நேற்றைய நிலவரப்படி, அவரது நிகர மதிப்பு $26.8 பில்லியன் அதிகரித்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு கவுதம் அதானி இந்தப் பட்டத்தை அடைவது இதுவே முதல் முறை. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட கெளதம் அதானி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே அதானி குழுமத்தின் பின்னடைவுக்கு காரணமானது. அறிக்கையால் அதானியின் பங்குகள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது அதானி மீண்டுள்ளார்.
உலக பணக்காரர்களின் பட்டியல்
பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட் 207 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உலகிலேயே முதல் பணக்காரர் என்ற இடத்தில் உள்ளார்.
$203 பில்லியன் சொத்து மதிப்புடன் எலோன் மஸ்க் இரண்டாவது இடத்தில் உள்ளார்
$199 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.
$166 பில்லியன் சொத்துக்களுடன் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நான்காவது இடத்தில் உள்ளார்
ஐந்தாவது இடத்தில் லாரி பேஜ் ($153 பில்லியன்).
ஆறாவது இடத்தில் பில் கேட்ஸ் ($152 பில்லியன்).
செர்ஜி பிரின் ($145 பில்லியன்) ஏழாவது இடத்தில் உள்ளார்.
ஸ்டீவ் பால்மர் ($144 பில்லியன்) எட்டாவது இடத்தில் உள்ளார்.
ஒன்பதாவது இடத்தில் வாரன் பஃபெட் ($137 பில்லியன்).
$132 பில்லியன் சொத்துக்களுடன் லாரி எலிசன் பத்தாவது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க | அம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. இத்தனை கோடிகளா!!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ