SBI Credit Card Charges: எஸ்பிஐ கிரேடிட் கார்டுகளின் கட்டணங்களை, பாரத் ஸ்டேட் வங்கியின் கார்டு மற்றும் கட்டண சேவை பிரிவு திருத்தியுள்ளது. வரும் மார்ச் 17ஆம் தேதியில் இருந்து திருத்தப்பட்ட எஸ்பிஐ கார்டு கட்டணங்கள் அமலுக்கு வரும் தெரிவிக்கப்ட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து, எஸ்பிஐ கார்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,"உங்கள் எஸ்பிஐ கிரேடிட் கார்டு மீதான கட்டணங்கள் வரும் மார்ச் 17ஆம் தேதியில் இருந்து மாறுகிறது" என தெரிவித்துள்ளது. அதாவது, எஸ்பிஐ செயலாக்கக் கட்டணம் ரூ.99 மற்றும் பொருந்தக்கூடிய வரிகளில் வசூலிக்கப்பட்டு வந்தது. 2023, 17 மார்ச் முதல், ரூ.199 மற்றும் பொருந்தக்கூடிய வரிகளாக கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும்.


மேலும் படிக்க | வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டும்... அபராதம் எவ்வளவு? - முழு விவரம்


2023, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எஸ்பிஐ கார்டுகள் மற்றும் கட்டணச் சேவைகள் அதன் SimplyCLICK கார்டுதாரர்களுக்கான சில விதிகளைத் திருத்தியிருப்பது நினைவுகூரத்தக்கது. எஸ்பிஐ கார்டுகள் மற்றும் கட்டணச் சேவைகள் இணையதளத்தின்படி, வவுச்சர் மற்றும் வெகுமதிப் புள்ளிகளைப் பெறுவதற்கான இரண்டு விதிகள் 2023 புத்தாண்டில் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.


"2023, ஜன. 6ஆம் தேதியில் இருந்து, ஆன்லைனில் செலவழிக்கும் மைல்கல்லை எட்டுவதற்கு SimplyCLICK கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் Cleartrip வவுச்சரை ஒரே ஒரு பரிவர்த்தனையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் வேறு எந்த சலுகை/வவுச்சருடன் இணைக்க முடியாது" எஸ்பிஐ கார்டுகள் & கட்டண சேவைகள் கூறியது.


Amazon.in-இல் SimplyClICK/SimplyClICK அட்வாண்டேஜ் எஸ்பிஐ கார்டு மூலம் ஆன்லைனில் செலவழிக்கும் 10X ரிவார்டு புள்ளிகள், 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 5X ரிவார்டு புள்ளிகளாக மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. Apollo 24X7, BookMyShow, Cleartrip, EazyDiner, Lenskart & Netmeds ஆகியவற்றில் ஆன்லைனில் செலவழிக்கும் போது உங்கள் கார்டு தொடர்ந்து 10X ரிவார்டு புள்ளிகளைப் பெறும் என கூறியுள்ளது.


மேலும் படிக்க | Valentine's Day: சிறப்பு டூடுல் வெளியிட்டு காதலர் தினத்தை கொண்டாடும் கூகுள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ