SBI வாடிக்கையாளர்கள் அலர்ட்: YONO App, நெட் பேங்கிங் சேவைகள் கிடைக்காது... விவரம் இதோ
SBI YONO App Downtime: மார்ச் 23, 2024 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில டிஜிட்டல் சேவைகளை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த முடியாது என வங்கி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
SBI YONO App Downtime: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது. மார்ச் 23, 2024 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில டிஜிட்டல் சேவைகளை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த முடியாது என வங்கி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், அதற்கு ஏற்ப திட்டமிட்டு தங்கள் வங்கி பரிவரத்தனைகளை முடித்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எந்த சேவைகள் கிடைக்காது?
எஸ்பிஐ (SBI) வெளியிட்டுள்ள தகவலின்டி, இன்டர்நெட் பேங்கிங், யோனோ லைட், யோனோ பிசினஸ் வெப் மற்றும் மொபைல் ஆப் (Yono Business Web & Mobile App), யோனோ மற்றும் யுபிஐ ஆகியவற்றின் சேவைகள் செயல்படாது எனக் கூறப்பட்டு உள்ளது.
எத்தனை மணி நேரம் சேவைகள் இருக்காது?
மார்ச் 23, 2024 அன்று மதியம் 01:10 மணி முதல் பிற்பகல் 02:10 மணி வரை எஸ்பிஐ வங்கியின் இன்டர்நெட் பேங்கிங், யோனோ லைட், யோனோ பிசினஸ் வெப் மற்றும் மொபைல் ஆப், யோனோ மற்றும் யுபிஐ சேவைகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.
எஸ்பிஐ வங்கியில் எந்த சேவைகள் கிடைக்கும்?
இந்த காலகட்டத்தில், யூபிஐ லைட் (UPI LITE) மற்றும் ஏடிஎம் (SBI ATM) சேவைகள் தொடர்ந்து செயல்படும். அதை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
UPI LITE லைட் என்றால் என்ன?
யூபிஐ லைட் என்பது ஒரு புதிய கட்டண தீர்வாகும். இது குறைந்த தொகை பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்காக NPCI உருவாக்கிய ஒரு காமன் லைப்ரரி (CL) பயன்பாட்டை உபயோகிக்கின்றது. இதற்கு ஒரு வரம்பும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Personal loan: மலிவான தனிநபர் கடன் கொடுக்கும் வங்கி எது? வட்டி விகிதம் & கட்டணங்கள்!
UPI லைட்டை எவ்வாறு இயக்குவது?
- முதலில் வாடிக்கையாளர்கள் தங்கள் UPI செயலியை திறக்க வேண்டும்.
- UPI செயலின் முகப்புத் திரையில், UPI LITE ஐ இயக்குவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.
- UPI LITE ஐ எப்படி பயன்படுத்துவது என்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பின்னர் அதை அக்செப்ட் செய்ய வேண்டும்.
- UPI LITE இல் சேர்க்க நினைக்கும் தொகையை உள்ளிட்டு, வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்
- அதன்பிறகு UPI பின்னை உள்ளிடவும்
- அதன் பிறகு, UPI LITE வெற்றிகரமாக இயக்கப்பட்டுவிடும்.
UPI LIte மூலம் எவ்வாறு பண பரிவர்த்தனை செய்வது?
- முதலில் UPI செயலியை திறக்கவும்.
- பின்னர் பணம் செலுத்த ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- அதன்பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ அந்தத்தொகையை உள்ளிடவும்
- இறுதியாக UPI பின் நம்பர் இல்லாமல் பணம் வெற்றிகரமாக அனுப்பப்படும்
மேலும் படிக்க | SIP... இளம் வயதிலேயே கோடீஸ்வரன் ஆக.. ‘இந்த’ ஃபார்முலாவை கடைபிடிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ