வீடு வாங்குபவர்களுக்கு good news: 30 bps வரை வட்டி விகிதத்தை குறைத்தது SBI!!
வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளாது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI) வீட்டுக் கடன் வட்டி விகிதம் ஏற்கனவே இந்திய வங்கித் துறையில் மிகக் குறைவானதாக உள்ளது. ஆனால் வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளாது. இது SBI வீட்டுக் கடன்களில் செய்யப்படும். மேலும் சலுகை செயலாக்கக் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியும் இதில் அடங்கும்.
SBI இன்று ஒரு எழுத்துப்பூர்வ செய்திக்குறிப்பில் இதை தெரிவித்ததோடு, வீட்டு நிதியத்தில் முன்னணியில் உள்ள SBI, நுகர்வோர் உணர்வுகளை புதுப்பித்து ஊக்கமளிப்பதில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தது. அவ்வப்போது வீட்டுக் கடன்களில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாகவும் SBI கூறியது.
இந்த முடிவைப் பற்றி SBI நிறுவனத்தின் எம்.டி (சில்லறை மற்றும் டிஜிட்டல் வங்கி) சி.எஸ். செட்டி பேசுகையில், “மார்ச் 21 வரை வருங்கால வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சலுகைகளை மேம்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வீட்டுக் கடன்களுக்கான SBI-யின் மிகக் குறைந்த வட்டியுடன், இந்த நடவடிக்கை வீடு வாங்குபவர்களை நம்பிக்கையுடன் வீடு வாங்கும் முடிவை எடுக்க ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தொற்றுநோய்க்குப் பிறகு, இனி முன்னேறிச் செல்ல நாடு தயாராக இருப்பதால், SBI வீடு வாங்குபவர்களுக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும். மேலும், தற்போது வீடு வாங்க தகுதியுள்ள அனைவரும் ஒரு சில கிளிக்குகளில் யோனோ ஆப் (YONO App) மூலம் காகிதமில்லா முன் அங்கீகரிக்கப்பட்ட டாப்-அப் வீட்டுக் கடனைப் பெறலாம். புதிய சலுகைகள் மூலம் புதிய ஆண்டு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வாழ்த்துகிறோம். ”
மிகப் பெரிய வீட்டுக் கடன் வழங்குநரான SBI கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட சலுகைகளை மேலும் ஏதுவாக்கியுள்ளது. இப்போது கடன் தொகை, கடன் வாங்கியவர்களின் கடன் மதிப்பு மற்றும் சொத்தின் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக வட்டி சலுகையை வங்கி வழங்குகிறது. நல்ல முறையில் கடனை திருப்பிச் செலுத்திய வரலாற்றைக் (Repayment History) காண்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டணங்களை வழங்குவது முக்கியம் என்று SBI நம்புகிறது.
ALSO READ: மலிவு விலையில் வீடு வாங்கணுமா? PNB-ன் e-auction-ல் கலந்துகொள்ளுங்கள்!!
SBI வீட்டுக் கடன் (Home Loan) வட்டி விகிதங்கள் சிபில் ஸ்கோருடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ .30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.80 சதவீதத்திலும், ரூ .30 லட்சத்துக்கு மேலான கடன்களுக்கு 6.95 சதவீதத்திலும் வட்டி விகிதங்கள் (Interest Rate) தொடங்குகின்றன. 8 மெட்ரோ நகரங்களில் ரூ .5 கோடி வரை கடன்களுக்கு 30 bps வரை வட்டி சலுகைகள் கிடைக்கின்றன.
வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே YONO App அல்லது https://homeloans.sbi / www.sbiloansin59minutes.com ஆகிய வலைத்தளங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து 5 bps கூடுதல் வட்டி சலுகையைப் பெறலாம்.
SBI வீட்டுக் கடன் வட்டி வீதக் குறைப்பு: இன்று அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய சலுகைகள்
1] SBI வீட்டு கடன் வட்டி விகிதங்கள், சிபில் ஸ்கோரின் அடிப்படையில் ரூ .30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.80 சதவீதம், ரூ .30 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு 6.95 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவுகளில் தொடங்குகின்றன.
2] கடன் தொகை மற்றும் சிபில் ஸ்கோரின் (CIBIL Score) அடிப்படையில் SBI வீட்டுக் கடன்களுக்கு 30 பிபிஎஸ் வரை வட்டி சலுகை;
3] கடன் வாங்கும் பெண்களுக்கு 5 bps SBI சிறப்பு சலுகை;
4] இருப்பு பரிமாற்றத்திற்கும் 5 bps SBI சலுகைகளும் கிடைக்கின்றன; மற்றும்
5] டிஜிட்டல் சோர்சிங் கூடுதலாக 5 bps SBI சலுகையை பெற்றுத்தரும்.
ALSO READ: வாடிக்கையாளர்களுக்கு SBI அளிக்கும் good news: வருகின்றன 3000 புதிய ATM-கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR