SBI cheque book request online: வங்கி தொடர்பான செயல்பாடுகளில் காசோலை புத்தகம், அதாவது Cheque Book மிகவும் முக்கியமானது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உங்கள் வீட்டு வாசலில் காசோலை புத்தகத்தை வழங்குகிறது. இதை ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி என்பதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டு நீங்கள் அவ்வாறு செய்தால் போதும். வங்கிக் கிளைக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்தோ SBI வாடிக்கையாளர் காசோலை புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காசோலை புத்தகத்துக்கான கோரிக்கையை ஆன்லைனில் சரிபார்க்கவும்


நீங்கள் காசோலை புத்தகத்துக்கான கோரிக்கையை ஆன்லைனில் வைக்கலாம். உங்கள் சேமிப்பு, நடப்பு இருப்பு, கேஷ் கிரெடிட் மற்றும் ஓவர்டிராஃப்ட் (Overdraft) போன்ற அனைத்து கணக்குகளுக்கும் காசோலை புத்தகத்தை கோரலாம்.


25, 50 அல்லது 100 எஸ்பிஐ காசோலை பக்கங்கள் கொண்ட புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு


நீங்கள் 25, 50 அல்லது 100 காசோலை பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகங்களைத் (Cheque Book) தேர்வு செய்யலாம். நீங்கள் அவற்றை கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம், அல்லது, உங்கள் கிளையிடம் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்புமாறு கோரலாம்.


மாற்று முகவரியையும் பயன்படுத்தலாம்


உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரியில் காசோலை புத்தகத்தை நீங்கள் பெறலாம். அல்லது காசோலை புத்தகத்தை பெற்றுக்கொள்ள மாற்று முகவரியையும் வழங்கலாம்.


ALSO READ: SBI மூலம் நிமிடங்களில் 50 லட்சம் வரை தங்கக் கடன் பெறலாம்: இதை செய்தால் போதும்


எஸ்பிஐ காசோலை புத்தகம் அனுப்பும் நேரம்


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கொள்கையின் படி, கோரிக்கை தேதியிலிருந்து 3 வேலை நாட்களுக்குள் வங்கி காசோலை புத்தகங்கள் அனுப்பப்படும்.


ஆன்லைனில் எஸ்பிஐ காசோலை புத்தகத்திற்கு இப்படி விண்ணப்பிக்கலாம்


* வங்கி வலைத்தளத்தின் ரீடெயில் பிரிவில் உள் நுழையவும்.


* ‘Requests tab’-ன் கீழ் உள்ள காசோலை புத்தக இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் அனைத்து பரிவர்த்தனை கணக்குகளையும் நீங்கள் இங்கே காணலாம்.


* உங்களுக்கு காசோலை புத்தகம் தேவைப்படும் கணக்கைத் தேர்ந்தெடுத்து, தேவையான காசோலை பக்கங்களின் எண்ணிக்கையையும் விநியோக முறையையும் உள்ளிடவும். பின்னர், அதை சமர்ப்பிக்கவும்.


முன்னதாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு KYC செயல்முறையை கட்டாயமாக்கியது. அதாவது இனி KYC இல்லாமல் SBI வாடிக்கையாளர்கள் கணக்கைப் பயன்படுத்த முடியாது. KYC இல்லாத கணக்குகள் செயலிழக்கப்படும் என்று SBI தெளிவாகக் கூறியுள்ளது. நீங்கள் KYC செயல்முறையை இன்னும் செய்யவில்லை என்றால், அதை உடனடியாக செய்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். 


ALSO READ: SBI வாடிக்கையாளர்கள் உஷார்: இன்று முதல் KYC அவசியம், இல்லையெனில் கணக்கு செயல்படாது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR