ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) மற்றும் ஜப்பானின் ஜே.சி.பி இன்டர்நேஷனல் கோ ஆகியவை செவ்வாயன்று "எஸ்பிஐ ரூபே ஜேசிபி பிளாட்டினம் தொடர்பு இல்லாத டெபிட் கார்டு" (SBI RuPay JCB Platinum Contactless Debit Card) அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கார்டை, SBI, RuPay நெட்வொர்க்கில் JCB-யுடன் இணைந்து அறிமுகப்படுத்தவுள்ளது. இது ஒரு தனித்துவமான இரட்டை இடைமுக அம்சத்துடன் வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு சந்தையில் தொடர்பு மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாடுகளில் தடையற்ற தொடர்பு பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டையும் செய்ய உதவும் என்று ஒரு வெளியீடு தெரிவித்துள்ளது.


JCB ஒரு பெரிய உலகளாவிய கட்டண பிராண்டாகும். இது ஜப்பானில் ஒரு முன்னணி கிரெடிட் கார்டு வழங்குனராகவும் உள்ளது.


இந்த கார்டின் மூலம் வாடிக்கையாளர்கள் JCB நெட்வொர்க்கின் கீழ் உலகெங்கிலும் உள்ள ATM-கள் மற்றும் PoS-களில் பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் கார்டைப் பயன்படுத்தி JCB-யுடன் கூட்டாண்மையில் உள்ள சர்வதேச இ-காமர்ஸ் வணிகர்களிடமிருந்தும் ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யலாம்.


வெளியீட்டின் படி, இந்த கார்ட் மூலம் RuPay வாலட் அடிப்படையிலான பரிவர்த்தனைகளையும் செய்யலாம். இதன் மூலம் இந்த கார்ட் நமக்கு ஒரு கூடுதலான கட்டண பயன்முறையையும் அளிக்கின்றது. நுகர்வோர் ஆஃப்லைன் வாலெட்டில் பணம் போட்டு, இந்தியாவில் (India) போக்குவரத்துக்கு (பஸ் மற்றும் மெட்ரோ) மற்றும் சில்லறை வணிக கட்டணங்களுக்குப் பயன்படுத்த முடியும்.


ALSO READ: LPG சிலிண்டர் மானியம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு...


"SBI மற்றும் JCB உடனான எங்களது கூட்டாண்மை, இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளையும் வேறெங்கும் காணாத வசதிகளையும் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். SBI RuPay JCB பிளாட்டினம் காண்டாக்ட்லெஸ் கார்ட் வைத்திருப்பவர்கள் இனி தங்கள் கார்டுகளை உலகெங்கிலும் மில்லியன் கணக்கான இடங்களில் பயன்படுத்தலாம்.


“எங்கள் நெட்வொர்க் மூலம், RuPay சர்வதேச சந்தையில் கால் பதிக்கிறது என்பது ஒரு நல்ல விஷயமாகும். NPCI-ல் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை வழங்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம்." என்று NPCI-ன் COO பிரவீனா ராய் கூறினார்.


கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு, தாய்லாந்தின் பேங்காக், சிங்கப்பூரின் ஆர்சார்ட் ரோட் மற்றும் பிரான்சில் பாரிஸ் ஆகிய இடங்களில் உல்ல JCB PLAZA Lounge-களுக்கான அணுகலும் கிடைக்கும்.


ALSO READ: IFSC, MICR Code-ல் மாற்றம்: இந்த 3 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!! 


SBI தலைமை பொது மேலாளர் வித்யா கிருஷ்ணன் கூறுகையில், "கார்டில் உள்ள டேப் அண்ட் பே தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களின் அன்றாட ஷாப்பிங்கை எளிதாக்கும் என்றும் இதன் மூலம் விரைவான தொடர்பு இல்லாத கட்டண பரிமாற்றம் நடக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்றார்.


உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பரிவர்த்தனை செய்வதற்கு அதிகமான இந்திய வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்துவதால், இந்த கார்ட் உறுப்பினர்களால் விரும்பப்பட்டு பாராட்டப்படும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது என்று JCB இன்டர்நேஷனல் கோ நிறுவனத்தின் தலைவரும் COO-வுமான யோஷிகி கனெகோ தெரிவித்தார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR