SBI MCLR Hike: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதன் சமீபத்திய மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) அறிவித்துள்ளது. எஸ்பிஐ எம்சிஎல்ஆர் விகிதங்கள் டிசம்பர் 15, 2023 முதல் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MCLR என்பது ஒரு வங்கி வாடிக்கையாளருக்குக் கடன் வழங்கும் மிகக் குறைந்த வட்டி விகிதமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதங்களை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே தொடர்வதற்கான முடிவை அறிவித்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், எஸ்பிஐ எம்சிஎல்ஆர் விகிதம் அறிவிப்பு வந்துள்ளது. டிசம்பர் 2023 இல் மத்திய வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) FY24 இன் இரண்டாவது இருமாத நாணயக் கொள்கைக் கூட்டத்தில் தொடர்ந்து 5 வது முறையாக ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் ஏற்கனவே இருந்த விகிதங்களையே தொடர்வதாக ஒருமனதாக முடிவு செய்தது.


எஸ்பிஐ எம்சிஎல்ஆர் உயர்வு: ரேட் ஸ்லாப்


ஒரு மாதத்திற்கான எம்சிஎல்ஆர் 8.15 சதவீதத்தில் இருந்து 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று மாத எம்சிஎல்ஆர் 8.15 சதவீதத்தில் இருந்து 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கி தனது ஆறு மாத எம்சிஎல்ஆர் -ஐ 8.45 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாகவும், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் -ஐ 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
 
எஸ்பிஐ தனது இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் -ஐ 8.65 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், வங்கியின் மூன்றாண்டு எம்சிஎல்ஆர் 8.75 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ITR தாக்கலில் மறக்கக்கூடாத 6 விதிகள்: மறந்தால் வீடு தேடி வரும் வருமான வரி நோட்டீஸ்


SBI MCLR Hike: யாருக்கு பாதிப்பு?


MCLR ஆனது ஏப்ரல் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் தவிர, நிதி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை விட குறைவாக கடன் கொடுக்க முடியாது. MCLR அந்த குறைந்தபட்ச வட்டி விகிதத்தைக் குறிக்கிறது. இது வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்குப் பொருந்தும்.


பொதுவாக, குறைந்த MCLR குறைந்த வட்டி விகிதங்களுக்கு வழிவகுக்கும், இதனால், கடன் வாங்குபவர்களுக்கு EMI -கள் குறையும். அதிக MCLR ஆனது அதிக வட்டி விகிதங்களை குறிக்கிறது. இதனால் கடன் வாங்குபவர்களின் EMI களும் அதிகரிக்கின்றன. 


எம்சிஎல்ஆர் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) சில வழிகாட்டுதல்களும் உள்ளன. MCLR குறித்த ஆர்பிஐயின் (RBI) வழிகாட்டுதல்களை இங்கே காணலாம். 


- நிலையான வீத வீட்டுக் கடன்கள் (Fixed rate home loans) MCLR ஆல் பாதிக்கப்படாது.


- நிதிகளின் விளிம்புச் செலவைக் கணக்கிடும்போது வைப்பு நிலுவைகள் மற்றும் பிற கடன்கள் கருதப்படுகின்றன.


- வெவ்வேறு தவணைக்காலங்களுக்கான நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் விளிம்புச் செலவுகளை வங்கிகள் வெளியிட வேண்டும்.


- ஃப்ளோட்டிங் ரேட் கொண்ட வீட்டுக் கடன்களில் கடன் அனுமதிக்கப்பட்ட தேதியில் இருந்த எம்.சி.எல்.ஆர் அடுத்த ரீசெட் தேதி வரை அப்படியே இருக்கும்.


முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு  டிசம்பர் 8 ஆம் தேதியன்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5% என்ற அளவிலேயே வைத்திருக்க ஏகமனதாக முடிவு செய்தது. மத்திய வங்கி FY24 க்கான ஜிடிபி வளர்ச்சி (GDP Growth) கணிப்புகளை 6.5% க்கு பதிலாக 7% ஆக மாற்றியது.


மேலும் படிக்க | Union Budget 2024: இந்த ஊழியர்களுக்கு வரும் ஜாக்பாட் அறிவிப்புகள், 17% ஊதிய ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ