SBI Patrons scheme: மூத்த குடிமக்களுக்கு அதிகபட்ச வட்டி, மிகச்சிறந்த FD திட்டம்
SBI Patrons scheme: இந்த திட்டம், மூத்த குடிமக்களின் நிலைமைகளையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குவதற்கான பாரத ஸ்டேட் வங்கியின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
SBI Patrons scheme: மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மேம்பட்ட வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட 'எஸ்பிஐ பேட்ரன்ஸ்' என்ற புதிய நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. SBI Patrons scheme என்றால் என்ன? இதனால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன? மூத்த குடிமக்களுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
State Bank of India
இந்த திட்டம், மூத்த குடிமக்களின் நிலைமைகளையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குவதற்கான பாரத ஸ்டேட் வங்கியின் முயற்சியின் ஒரு பகுதியாகும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மேம்பட்ட நன்மைகளை அளிக்க எஸ்பிஐ இந்த திட்டதை தோங்கியுள்ளது.
SBI Patrons scheme: இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
- தகுதி: இந்த திட்டத்தை 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்கள், தனியாகவோ அல்லது கூட்டாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
- கூட்டு எஃப்டி கணக்காக இருந்தால், முதன்மை கணக்கு வைத்திருப்பவர் குறைந்தது 80 வயதுடையவராக இருக்க வேண்டும்.
- வட்டி விகிதம்: சூப்பர் மூத்த குடிமக்கள் வழக்கமான மூத்த குடிமக்கள் எஃப்டி விகிதங்களை விட 10 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) அதிக வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.
- வைப்பு வகை: இந்தத் திட்டம் கால வைப்புத்தொகை (டிடிஆர்) மற்றும் குறுகிய கால வைப்புத்தொகை (எஸ்டிடிஆர்) ஆகியவற்றை வழங்குகிறது.
- வைப்புத்தொகை: குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1,000. இதன் அதிகபட்ச வரம்பு ரூ.3 கோடிக்கும் குறைவான தொகையாகும்.
- திட்ட காலம்: வைப்பு காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் உள்ளது.
- செயல்பாட்டு முறை: ஒற்றை மற்றும் கூட்டு கணக்குகள் இரண்டிற்கும் இது கிடைக்கிறது.
- ப்ரீமெச்யூர் வித்டிராயல்: திட்ட காலம் முடிவதற்கு முன்கூட்டியே பணம் எடுப்பது அனுமதிக்கப்படுகிறது.
- கால வைப்புத்தொகை வழக்கமான அபராதங்களுக்கு உட்பட்டது.
இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
அதிக வருமானம்: இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டியைப் பெறுவார்கள். இது அவர்களின் சேமிப்பில் சிறந்த வருமானத்தை வழங்கும்.
அதிக நன்மைகள்: தற்போதுள்ள கால வைப்புத்தொகை வாடிக்கையாளர்கள் வங்கியின் அமைப்பில் பிறந்த தேதியின் அடிப்படையில் 80 வயதை எட்டியதும் அதிக வட்டி விகிதத்தின் பயனை தாமாக பெறுவார்கள்.
கால அளவில் நெகிழ்வுத்தன்மை: வாடிக்கையாளர்கள் தங்கள் நிதித் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வைப்புத்தொகை காலங்களிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
SBI இன் இந்தப் புதிய சலுகை, மூத்த குடிமக்களுக்கு வங்கியுடனான நீண்டகால உறவை மேம்படுத்துவதோடு, அவர்களது நிதி பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ