Bank Nifty: நிஃப்டி50, நிஃப்டி வங்கியில் Paytm டிரெண்டிங்
Dalal Street Nifty50: தலால் ஸ்ட்ரீட்டில் இன்று பங்கு வர்த்தகம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன. இது மார்ச் டெரிவேடிவ்ஸ் (எஃப்&ஓ) தொடரின் இரண்டாவது வர்த்தக அமர்வு இன்று எப்படியிருக்கும்?
மும்பை: தேசியப் பங்குச் சந்தையில் பல சந்தைக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த குறியீடுகளில் நிஃப்டி 50 என்ற குறியீடே மிக முக்கியமானதாகவும் பிரபலமானதாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் 50 நிறுவனங்களின் பங்கு விலையைக் கொண்டு உருவாக்கபப்டும் சராசரி (weighted average) முறை மூலம் நிஃப்டி 50 குறியீடு கணக்கிடப்படுகிறது.
பிப்ரவரி 27 அன்று மும்பையின் முக்கிய பந்துச் சந்தையான தலால் ஸ்ட்ரீட்டில் இன்று பங்கு வர்த்தகம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன. இது மார்ச் டெரிவேடிவ்ஸ் (எஃப்&ஓ) தொடரின் இரண்டாவது வர்த்தக அமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி மற்றும் நிஃப்டி வங்கிக்கான முக்கிய ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகள் மற்றும் சந்தையின் போக்கு ஆகியவற்றைப் பார்க்கலாம். கடந்த ஆறு நாட்களாக நட்டத்தில் சென்ற நிஃப்டி மீண்டும் மீண்டெழுமா என்பதே, வர்த்தகம் தொடங்கும்போது முதலீட்டாளர்களின் மனதில் இருந்த எதிர்பார்ப்பாக இருந்தது.
மேலும் படிக்க | அதானி மொத்தம் இழந்தது எத்தனை லட்சம் கோடி தெரியுமா? சாம்ராஜ்ஜியம் எழுவது சாத்தியமா?
தொழில்நுட்பம் மற்றும் டெரிவேட்டிவ்கள் குறுகிய கால முதலீட்டில் அதிகமாக விற்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் 17,500 என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் கீழே வருவதால், நிலைமை உடனடியாக சரியாகிவிடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் நம்பவில்லை.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், எல்&டி, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, ஓஎன்ஜிசி, அல்ட்ராடெக் மற்றும் மாருதி ஆகியவை குறுகிய கால வர்த்தகத்திற்கு ஏற்ற பங்குகளாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இன்று நிஃப்டி50, நிஃப்டி வங்கியில் Paytm அதிகம் கவனிக்கப்படும் பங்காக இருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் விலை சரிந்ததை அடுத்து, இன்னும் பங்குச்சந்தை ஒரு நிலைக்கு வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ