பென்ஷன் மற்றும் கிராஜுவிட்டி இனி இல்லை! அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!
பணியில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் பணியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்னர் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று ஊழியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் போனஸ் வழங்கிய பிறகு, இப்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகையை வழங்க அரசாங்கம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசு தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றியுள்ளது. அதாவது அரசு இப்போது அதன் ஊழியர்களுக்கு மிகக்கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது, இதனை ஊழியர்கள் பின்பற்றாமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அரசின் புதிய விதிகளின்படி, பணியில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் பணியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்னர் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று ஊழியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வகை வாகனங்களின் உரிமம் ஏப்ரல் 1 முதல் ரத்து!
மத்திய அரசு சமீபத்தில் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 8ஐ மாற்றியுள்ளது, அதில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் பணியின் போது ஏதேனும் கடுமையான குற்றமோ அல்லது அலட்சியப்போக்கில் ஈடுபட்டு அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பணி ஓய்வுக்குப் பிறகு அவரது கிராஜுவிட்டு மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது விதியை மாற்றியமைத்திருப்பது குறித்து சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளது. இதுதவிர குற்றம் செய்த ஊழியர்கள் குறித்த தகவல் கிடைத்தால் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு அந்த அறிவிப்பில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஊழியர்களின் நியமன அதிகாரத்தில் ஈடுபட்டுள்ள அத்தகைய ஜனாதிபதிகள் கிராஜுவிட்டி அல்லது ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க அதிகாரம் பெற்றுள்ளனர். ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையுடன் தொடர்புடைய செயலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்தி வைக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்தி வைக்க சிஏஜிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பணியின் போது ஊழியர்கள் மீது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் நியமிக்கப்பட்டால், அதே விதிகள் அவருக்கும் பொருந்தும். ஒரு ஊழியர் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை பெற்ற பிறகு அவர் குற்றம் செய்தவர் என்பது நிரூபணமானால் அவரிடமிருந்து முழு அல்லது பகுதியளவு ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி திரும்பப்பெறப்படும். அதிகாரிகள் விரும்பினால் ஊழியரின் ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி நிரந்தரமாக அல்லது சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கலாம்.
மேலும் படிக்க | 299 ரூபாயில் அஞ்சலகம் வழங்கும் அசத்தல் காப்பீடு; ரூ.10 லட்சம் வரையிலான பலன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ