சென்னை: தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக ரயில் பயணத்திற்கு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கிவிடும், அதன் அடிப்படையில், மூன்று மாதங்களுக்கு முன்னரே தீபாவளிக்கு பயணிப்பதற்காக பலரும் ரயில் பயணச்சீட்டை முன் பதிவு செய்யத் தொடங்கிவிடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளாக ஆக, அதுவும் தீபாவளி நெருங்கும்போது, வெயிட்டிங் லிஸ்ட் உச்சகட்டத்தை அடையும். தீபாவளிக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால், விமானம், ரயில், பேருந்து, மினி பஸ் என பொது போக்குவரத்து எதிலுமே டிக்கெட் கிடைக்காது. இந்த நிலையில், பயணம் செய்ய என்ன வழி என யோசித்து திண்டாடும் மக்களுக்கு, தனியார் ரயில் இயங்கும் என்றும், அதற்காக தீபாவளி சிறப்பு ரயில் அறிவித்து முன்பதிவு துவங்கினால் நன்றாகத் தானே இருக்கும்?


ஆனால், உண்மையில் தனியார் நிறுவனத்திற்கு தீபாவளிக்கு சிறப்பு ரயில் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டதா? இது பலருக்கும் எழும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, மாநில அரசுகள் சிறப்பு பேருந்துகளை இயக்கினால், மத்திய ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கும்.


மேலும் படிக்க | ’பாஜகவின் சதி திட்டம்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சூசகம்


ஆனால், எவ்வளவு இயக்கினாலும் மக்களின் தேவைக்கு எப்போதுமே பற்றாக்குறை இருக்கும் என்ற நிலையில், தனியார் ரயில் சேவை முன்பதிவு என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. அதிலும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 13 வரை மூன்று நாட்களுக்கு பிரீமியம் கட்டணத்தில் தமிழ்நாட்டில் ரயில்களை இயக்கப் போவதாக வெளியான விளம்பரம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


விளம்பரத்தின்படி, சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி வழியாகத் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய நகரங்களுக்கு நவம்பர் 9 முதல் 13 வரை 6 சிறப்பு ரயில்கள் இயங்கும் என்று தெரிகிறது. அதேபோல மறு மார்க்கமாக நவம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக ரயில்கள் இயக்கப்படும் என்றும் விளம்பரம் கூறியது.


மேலும் படிக்க | சீனியர் சிட்டிசன்களுக்கு NO சொன்ன ரயில்வே! மூத்த குடிமக்களுக்கே இந்த நிலைமையா?


இந்த ரயில் பயணத்திற்கான டிக்கெட் கட்டணத்தையும் அறிவித்துள்ள அந்த தனியார் நிறுவனம் முன்பதிவையும் தொடங்கிவிட்டது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியாகாத நிலையில், டிக்கெட் முன்பதிவு எழுந்ததால், தென்னக ரயில்வே வட்டாரத்தில் விசாரித்தோம்.


அதில், தனியார் நிறுவனம் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை வந்திருப்பது உண்மைதான் என்றும், ஆனால், ரயில்வே நிர்வாகம், தனியாருக்கு தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி தரவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.


ஆனால், தனியார் நிறுவனம் தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் கூறிய நிலையில், திடீரென டிக்கெட் புக்கிங் நிறுத்தப்பட்டது. 


சென்னை மற்றும் திருவனந்தபுரம் மார்க்கத்தில் தீபாவளி சிறப்பு ரயில் நிச்சயம் இயக்கப்படும். இதற்கான அனுமதி கிடைத்த பிறகு மீண்டும் புக்கிங் ஆரம்பிக்கும் என்று தனியார் நிறுவனம், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | விவசாயிகளுக்கு பம்பர் பரிசு! ரூ.15 லட்சம் தரும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ