பற்றாக்குறையான குடும்ப பட்ஜெட்டால் கவலையா? இப்படி திட்டமிட்டா பணப்பிரச்சனை சால்வ்!
Ultimate Lifetime Money Plan: சம்பளம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாவது எப்போது? இந்த ஃபார்முலாவை பயன்படுத்திப் பாருங்க...
Financial Planning: எவ்வளவு பணம் வந்தாலும் பத்தமாட்டேங்குது என புலம்புபவரா நீங்கள்? சம்பளம் வந்தவுடனே காணாமல் போய்விடுகிறது என்று குறைபடுபவர்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் உள்ள பற்றாக்குறை எப்போதும் சிக்கலாகவே இருக்கிறது. இதை எப்படி சீர் செய்வது? உலகில் பிரபலமான 50-30-20 என்ற ஃபார்முலாவை பயன்படுத்தி பலர் பயனடைந்துள்ளனர். இந்த சூத்திரத்தை பயன்படுத்தினால், வாழ்க்கையில் பிரச்சனைகளை சீர் செய்யலாம். வரவு எவ்வளவாக இருந்தாலும் கவலை குறையும்.
ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் லட்சம் ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தாலும், பணப் பிரச்சனை இல்லாதவர்கள் யாராவது உண்டா? வாங்கும் சம்பளம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாவது எப்போது? ஒரு சூத்திரத்தை பயன்படுத்தி பிரச்சனையை சீர் செய்யலாம். வருவாமனத்திற்கு ஏற்றவாறு பிரத்யேக பட்ஜெட் போட்டு, அதற்கேற்ப செலவு செய்தால் நிலைமையை சமாளிக்கலாம். அதற்கு 50-30-20 விதி உதவும், உங்கள் நிதித் திட்டத்தை மேம்படுத்த பயனளிக்கும் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
50-30-20 சூத்திரம்
50-30-20 என்ற பிரபல ஃபார்முலா, அமெரிக்க செனட் மற்றும் டைம் இதழின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான எலிசபெத் வாரன் உருவாக்கியது. 2006 ஆம் ஆண்டு, அவர் தனது மகளுடன் சேர்ந்து எழுதிய All Your Worth: The Ultimate Lifetime Money Plan (ஆல் யுவர் வொர்த்: தி அல்டிமேட் லைஃப்டைம் மணி பிளான்) என்ற புத்தகத்தில் இந்த சூத்திரத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
இந்த சூத்திரத்தின் கீழ், சம்பளத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். தேவை அடிப்படை தேவை மற்றும் சேமிப்பு என மூன்று பகுதிகளாக வருமானத்தை பிரித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லும் இந்த சூத்திரத்தின் படி, வருமானத்தில் 50 சதவீதத்தை நமக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களுக்கு செலவிட வேண்டும். அதாவது எந்த பொருட்கள் இல்லாமல் நாம் வாழ முடியாதோ அவற்றை அடிப்படைத் தேவைக்கான பொருட்களாக கருதலாம். மளிகை சாமனங்கள், காய்கறி, பழங்கள், வாடகை, பயன்பாட்டு பில்கள், குழந்தைகளின் கல்வி, இஎம்ஐ மற்றும் சுகாதார காப்பீடு போன்ற விஷயங்கள் இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | SCSS Vs மூத்த குடிமக்களுக்கான வங்கி FD... வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுப்பது எது..!!
ஆசைக்கான செலவுகள்
விதியின் இரண்டாம் பகுதியான ஆசைக்கான செலவுகள் என்ற பிரிவின் கீழ், தங்களது விருப்பங்களுக்காக, 30 சதவிகிதத்தை செலவிடலாம் என இந்த சூத்திரம் சொல்கிறது. ஆசைகளுக்கு செலவிடுவதும் அவசியம் தானே? ஆனால், இவற்றை செய்யாவிட்டாலும் வாழ்க்கை பாதிக்காது என்பதால், தவிர்க்கப்படக்கூடிய செலவுகள் என்று இந்த பிரிவைச் சொல்லலாம். ஆனால் அவற்றிற்கு பணம் செலவழிப்பது மகிழ்ச்சிக்கானது. திரைப்படங்களைப் பார்ப்பது, பார்லருக்குச் செல்வது, ஷாப்பிங் செய்வது, வெளியே சாப்பிடுவது, பொழுதுபோக்குகளுக்கு செலவிடுவது ஆகியவை இதில் அடங்கும்.
மூன்றாவது பகுதி
இந்த விதியின் மூன்றாவது மற்றும் கடைசி பகுதி 20 சதவீத சம்பளத்தை சேமிப்பது தொடரபானது. ஓய்வூதிய திட்டமிடல், குழந்தைகளின் உயர்கல்வி, குழந்தைகளின் திருமணம் மற்றும் அவசரகால நிதிக்கு பயன்படுத்த வேண்டும்.
இந்த விதியை எப்படி அமல்படுத்தலாம்? ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்வோம். மாத வருமானம் 25 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். 50-30-20 விதியின்படி, இதில் 50 சதவிகிதம் அதாவது12 ஆயிரத்து ஐநூறு ரூபாயை வீட்டுத் தேவைக்களுக்கு (அடிப்படை செலவுகள்) செலவிட வேண்டும். வீட்டு வாடகை, ரேஷன், மின்சாரம் மற்று தண்ணீர் கட்டணம், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள், போக்குவரத்து செலவுகள், வாகனங்களுக்கான பெட்ரோல் போன்ற அத்தியாவசிய செலவுகள் இதில் அடங்கும்.
சம்பளத்தின் 30 சதவீதத்தை அதாவது இந்த உதாரணத்தின் படி 7500 ரூபாயை உங்கள் விருப்பத்திற்கு செலவிடலாம். பயணம் செய்வது, திரைப்படம் பார்ப்பது, ஆடைகள் வாங்குவது, மொபைல்-டிவி அல்லது பிற கேஜெட்கள் வாங்குவது போன்றவை அடங்கும்.
எதிர்கால சேமிப்புக்காக 20 சதவிகிதம்
உதாரணத்தின்படி, 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 20 சதவீதம் அதாவது ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை சேமிக்க வேண்டும். இந்த பணத்தை உங்கள் வசதிக்கேற்ப வேறுவிதமாக முதலீடு செய்யலாம். ஓய்வூதியத்திற்காக NPS இல் முதலீடு செய்யலாம், வங்கியில் வைப்புத்தொகையாக வைக்கலாம், நீண்ட காலத்திற்கு PPF இல் பணம் சேமிக்கலாம் அல்லது பரஸ்பர நிதிகள் போன்றவற்றில் SIP செய்யலாம்.
மேலும் படிக்க | வங்கிகளை மிஞ்சும் NBFC... வட்டியை அள்ளித் தரும் FD முதலீடுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ