SIP Calculator: மாதம் ரூ.3,000 முதலீட்டில் ரூ.3 கோடி கார்பஸ்.... மியூசுவல் ஃபண்ட் ஒரு பணம் காய்க்கும் மரம்
SIP Investment Tips: நமக்கு கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமித்து, சரியான இடத்தில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடுகள் மூலம் நினைத்து நம்ப முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
SIP Investment Tips: நமக்கு கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமித்து, சரியான இடத்தில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடுகள் மூலம் நினைத்து நம்ப முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம். உங்கள் கோடீஸ்வர் கனவை நனவாக்க உதவும் முதலீட்டு திட்டங்களில் எஸ்ஐபி என்னும் பரஸ்பர நிதிய முதலீடு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
பரஸ்பர நிதியம் என்னும் ம்யூசுவல் பண்ட் முதலீடுகள் சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், பங்குச் சந்தையுடன் ஒப்பிடுகையில், இதில் ரிஸ்க் குறைவு. அதோடு, அதிக வருமானம் கொடுக்கும் திட்டம் என்பதால், சாமான்ய மக்கள் பெரிதும் விரும்பும் முதலீட்டு திட்டமாக உள்ளது.
SIP முதலீட்டின் சிறந்த அம்சம் என்னவென்றால், மாதந்தோறும் ரூ. 500 என்ற அளவில் கூட முதலீடு செய்யலாம். அந்த வகையில் ரூ.3000 என்ற அளவில் மாதாந்திர SIP முதலீடு செய்தால், 10, 20, 30, 40 ஆண்டுகளில் எந்த அளவிற்கு நிதியை சேர்க்க முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாதம் ₹3000 முதலீட்டில் 10 வருடங்களில் கிடைக்கும் வருமானம்
பரஸ்பர நிதியத்தில், மாதம் ரூ. 3000 SIP முதலீட்டை 10 ஆண்டுகள் தொடரும் போது, அதில் கூட்டு வட்டி வருமானத்தை பலன்கள் கிடைப்பதால், பணம் எளிதாக பன்மடங்காகிறது. SIP ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீதம் வருமானம் அளிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், சிள சிறந்த முதலீடுகள் 20% முதல் 30% வரை கூட வருமானம் அளித்துள்ளன. சராசரி ஆண்டு வருமானம் 12 சதவீதம் என்ற அடிப்படையில், அவர் 10 ஆண்டுகளில் அவரிடம் சுமார் ரூ.7 லட்சம் இருக்கும். இதில் முதலீட்டுத் தொகை ரூ.3,60,000 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயம் ரூ.3,40,000 என்ற அளவிலும் இருக்கும்.
மாதம் ₹3000 முதலீட்டில் 20 வருடங்களில் கிடைக்கும் வருமானம்
பரஸ்பர நிதியத்தில், மாதம் ரூ. 3000 SIP முதலீட்டை 20 ஆண்டுகள் தொடரும் போது, சராசரி ஆண்டு வருமானம் 12 சதவீதத்தின் அடிப்படையில், அவர் 20 ஆண்டுகளில் ரூ.30,00,000 நிதியை உருவாக்க முடியும். இதில் முதலீட்டுத் தொகை ரூ.7,20,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் ரூ.22,80,000 ஆகவும் இருக்கும். இதன் மூலம், ஆண்டுகள் கூட கூட கூட்டு வட்டியின் பலனால் பணம் பன்மடங்காவதை கவனிக்கலாம்
மேலும் படிக்க | SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது கையில் ரூ.6 கோடி... மாதம் ரூ.6000 முதலீடு போதும்
மாதம் ₹3000 முதலீட்டில் 30 வருடங்களில் கிடைக்கும் வருமானம்
பரஸ்பர நிதியத்தில், மாதம் ரூ. 3000 SIP முதலீட்டை 30 ஆண்டுகள் தொடரும் போது, சராசரி ஆண்டு வருமானம் 12 சதவீதத்தின் அடிப்படையில், அவர் 30 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்க முடியும். இதில் முதலீட்டுத் தொகை ரூ.10,80,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் சுமார் ரூ.95,00,000 என்ற அளவிற்கு குறையாமலும் இருக்கும்.
மாதம் ₹3000 முதலீட்டில் 40 வருடங்களில் கிடைக்கும் வருமானம்
பரஸ்பர நிதியத்தில், மாதம் ரூ. 3000 SIP முதலீட்டை 30 ஆண்டுகள் தொடரும் போது, சராசரி ஆண்டு வருமானம் 12 சதவீதத்தின் அடிப்படையில், அவர் 40 ஆண்டுகளில் ரூ.3.5 கோடி நிதியை உருவாக்க முடியும். இதில் முதலீட்டுத் தொகை ரூ.14,40,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் ரூ.3.5 கோடி என்ற அளவிலும் இருக்கும்.
SIP முதலீடுகளில் உள்ள அபாயம்
நீண்ட கால SIP முதலீடு மூலம் ஆயிரங்களஒ கோடிகளாக்கலாம் என்றாலும், SIP உடன் தொடர்புடைய சந்தை அபாயங்களை அறிந்திருக்க வேண்டும். பரஸ்பர நிதிகளில் முதலீடு சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் எப்பொழுதும் தங்கள் வருமானம், இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: SIP கால்குலேட்டர் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வருவாய் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையான புள்ளிவிவரங்கள் சிறிதளவு மாறுபடலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. எந்த முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை செய்யவும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ