SIP Mutual Fund: ஆயிரத்தை கோடிகளாக்கும் பரஸ்பர நிதியம்... இந்த விஷயங்களில் கவனம் தேவை
பங்குச் சந்தை முதலீட்டை விட, பரஸ்பர நிதிய முதலீடுகள் பாதுகாப்பானவை. SIP என்னும் மியூச்சுவல் ஃபண்டில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம்.
பங்குச் சந்தை முதலீட்டை விட, பரஸ்பர நிதிய முதலீடுகள் பாதுகாப்பானவை. SIP என்னும் மியூச்சுவல் ஃபண்டில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம். பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக 12 - 15% சதவிகித ஆண்டு வருமானம் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பல சமயங்களில், 20% முதல் 30% வரை கூட ஆண்டு வருமானத்தை வழங்கியுள்ளன என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
பரஸ்பர நிதிகளில் முதலீடு: மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
இருப்பினும், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நிதி இலக்குகள்
ஓய்வு காலத்திற்கான நிதி, குழந்தைகள் கல்வி அல்லது திருமணம் உள்ளிட்ட எந்த விதமான இலக்குகளை மனதில் வைத்துக் கொண்டு முதலீடு செய்கிறீர்கள் என்பதை முடிசெய்ய வேண்டும். இதன் மூலம், முதலீட்டிற்கான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எளிதாகிவிடும். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டை எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும், உங்கள் நிதி இலக்குகளின்படி சரியான முதலீட்டு அளவை தேர்ந்தெடுத்து மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்ய முடியும். நிதி வகை
முதலீட்டிற்கு எந்த வகையான நிதியை தேர்வு செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. நிதி வல்லுநரின் ஆலோசனையைப் பெறாமல், முதலீட்டிற்கான பரஸ்பர நிதியை தேர்ந்தெடுப்பது சரியல்ல. இதனால், பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். முதலில் நீங்கள் பல்வேறு வகையான பரஸ்பர நிதிகளைப் புரிந்து கொண்டு, உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவிற்கு மிகவும் பொருத்தமான நிதிகளைத் தேர்வு செய்யவும். உதாரணமாக, அதிக ரிஸ்க் எடுத்து அதிக வருமானம் பெற விரும்பினால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நிலையான வருமானத்திற்கு கடன் நிதிகள் பத்திரங்கள் போன்றவை சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு ரிஸ்க் குறைவு. அதேசமயம், ஈக்விட்டி மற்றும் கடன் இரண்டிலும் கலந்து முதலீடு செய்வது ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் இடையே சமநிலையை பராமரிக்க உதவும்.
நிதியின் ஸ்திரத்தன்மை
முதலீட்டிற்கான நிதியைத் தேர்ந்தெடுக்கும் போது, அது கடந்த காலத்தில் எவ்வாறு வருமானத்தை வழங்கியது என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம். வெவ்வேறு கால கட்டங்களில் நிதியின் வருமானத்தை சரிபார்க்கவும். இது நிதியின் ஸ்திரத்தன்மை மற்றும் வெவ்வேறு சந்தை நிலைகளில் அதன் செயல்திறன் பற்றிய தகவலை உங்களுக்கு வழங்கும்.
ரிடீம் செய்யும் போது ஏற்படும் நிதி சுமை
மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுக்கும்போது அதனை ர்டீம் செய்யும் போது, அதாவது பணத்தை திரும்ப பெறும் போது ஏற்படும் நிதி சுமையைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன் உங்கள் யூனிட்களை ரிடீம் செய்தால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும். இதனால் உங்கள் வருமானம் குறையலாம்.
நிதியின் செலவு விகிதம்
பரஸ்பர நிதிகள் செலவு விகிதத்தை வசூலிக்கின்றன. நிதியின் சொத்துக்களின் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தை நிதியை நிர்வகிப்பதற்கான வருடாந்திர செலவாக உங்கள் நிதியிலிருந்து கழிக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுக்கும்போது இதை கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில், முதலீட்டு நிதியின் மதிப்பின் அடிப்படையில், செலவு விகிதம் கழிக்கப்படுகிறது, இது உங்கள் வருமானத்தை நேரடியாகப் பாதிக்கிறது. குறைந்த செலவு விகிதம் கொண்ட ஒரு நிதியைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ