கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மற்றும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக பயணிகள் விமானங்களும் மே 3 வரை இந்த முழு அடைப்பு காலத்தில் இயக்கப்படாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.


இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் ‘இந்த விஷயத்தில் அரசாங்கம் முடிவு செய்த பின்னரே விமானங்களை முன்பதிவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்’. மற்றும் "உள்நாட்டு அல்லது சர்வதேச விமான சேவைகளை திறக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்துகிறது. இது தொடர்பாக அரசாங்கம் ஒரு முடிவை எடுத்த பின்னரே விமான நிறுவனங்கள் தங்கள் முன்பதிவுகளைத் திறக்க அறிவுறுத்தப்படுகின்றன," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


READ | 50 சதவீத இருக்கைகளுடன் விமானத்தை இயக்க திட்டமிடும் IndiGo நிறுவனம்...


முன்னதாக கொரோனா வைரஸ் முழு அடைப்பின் முதல் கட்ட பயணத்தின் போது விமான டிக்கெட்டுகளை (மே 3-ஆம் தேதி வரை) முன்பதிவு செய்த பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் எந்த ரத்து கட்டணமும் இன்றி முழு பணத்தைத் திரும்ப அளிக வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை முதல் கட்ட பூட்டுதலை இந்தியா விதித்தது. இரண்டாம் கட்ட பூட்டுதல் ஏப்ரல் 15 முதல் மே 3 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் கொரோனா பரவுதல் மேலும் நிகழாமல் இருக்க பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுகையில்., "முதல் முழு அடைப்பு காலத்தில் ஒரு பயணி டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அந்த பணத்தை விமான நிறுவனங்களிடம் இருந்து முழுமையாக திரும்ப பெறலாம், மற்றும் இரண்டாம் கட்ட முழு அடைப்பின் போது மேற்கொள்ளும் பயணத்திற்கு இதே பணத்தை பறிமாற்றம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ரத்துசெய்யும் கட்டணங்கள் விதிக்கப்படாமல் சேகரிக்கப்பட்ட முழுத் தொகையையும் விமான நிறுவனம் திருப்பித் தரும்." என்று குறிப்பிட்டிருந்தது.


ரத்து செய்வதற்கான கோரிக்கையின் தேதியிலிருந்து மூன்று வார காலத்திற்குள் பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சகம் கூறியது. முழு அடைப்பு காலத்தில் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்திய விமான நிறுவனங்களின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது.


READ | மீண்டும் IndiGo தள்ளுபடி... ₹3,499-ல் வெளிநாடு செல்ல ஒரு வாய்ப்பு!


நாட்டிலுள்ள விமான நிறுவனங்கள் அனைத்து பயணிகளுக்கும் முழு பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமானால், அது அவர்களின் பண இருப்புக்களைக் கணிசமாகக் குறைக்கும் என்று அஞ்சுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள எந்த விமான நிறுவனங்களும் முழு பணத்தைத் திரும்ப அளிக்கவில்லை, அதற்கு பதிலாக, அவர்கள் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் அதே விலையில் கடன் வவுச்சர்களை வழங்குகிறார்கள். இந்த வவுச்சர்கள் அடுத்த ஒரு வருடத்தில் பயணிகள் மேற்கொள்ள இருக்கும் மற்றொரு முன்பதிவுக்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.