தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond scheme - SGB). இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில், அதாவது நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி முதலீட்டிற்கான பலனை பெற முடியும். இதில் உள்ள மற்றொரு முக்கிய சிறப்பு அமசம். தங்கத்தை பொருள் வடிவில் வைத்திருந்தால், அதனை திருடு போகாமல் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது. அப்படி அல்லாமல், தங்கத்தை ஆவண வடிவில் பாதுகாப்புதும் மிக எளிது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது எப்போதுமே அதிகம். குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகம். டிஜிட்டல் தங்கத்தின் மீது தற்போது ஆர்வம் கூடிக் கொண்டே செல்லும் நிலையில், இந்த பேப்பர் தங்கம் என்பது மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கம் வாங்க அரசாங்கம் மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. பட்ஜெட்டுக்கு முன்பாக தங்கத்தை மலிவாக வாங்க  மத்திய அரசு வாய்ப்பளித்து வருகிறது. தங்கத்தை மலிவாக வாங்க இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. தங்கப் பத்திரத் திட்டம் 2023-24 ( Sovereign Gold Bond scheme) 18 டிசம்பர் 2023 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை டிசம்பர் 22, 2023 வரை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்க பத்திரம் 28 டிசம்பர் 2023க்குள் வழங்கப்படும். சவரன் தங்கப் பத்திரத் திட்டத் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12, 2024 அன்று தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த மாதம் டிசம்பர் 18ம் தேதி முதல் அதாவது டிசம்பர் 22ம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனை நடைபெறும். ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் இந்த தங்க பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


SGB ​​தங்கத்தின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது


தங்கப் பத்திரங்களின் வெளியீட்டு விலையானது,  தங்கத்தின் சந்தை விலையை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. வெளியீட்டு விலையானது. வெளியீட்டு தினத்திற்கு மூன்று வேலை நாட்களில், 999 தூய்மையான தங்கத்தின் சந்தை விலையின் சராசரியின் அடிப்படையில் தங்க பத்திரத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக்: பழைய ஓய்வூதியம் பாரத்தை அதிகரிக்கும்... எச்சரித்த RBI


தங்கப் பத்திரத் திட்டம் என்றால் என்ன?


அரசின் இந்த திட்டத்தின் கீழ், சந்தையை விட குறைந்த விலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது அரசு நடத்தும் திட்டம். இதில் முதலீடு செய்யப்படும் பணத்தின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த பத்திர திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நடத்துகிறது. இதை எந்த வங்கியிலும் வாங்கலாம். நெட் பேங்கிங் மூலமாகவும் வாங்கலாம்.


எவ்வளவு தங்கம் வாங்கலாம்?


இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்க வேண்டும்.  அதாவது, ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் பிற நிறுவனங்கள் 20 கிலோ வரை  தங்கம் வாங்கிக் கொள்ள முடியும்.


எங்கிருந்து தங்கம் வாங்கலாம்?


அனைத்து வங்கிகளிலும், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCIL) ஆகியவற்றிலிருந்து தங்கப் பத்திரத்தை வாங்கலாம். இது தவிர, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் ஆகியவற்றிலிருந்தும் வாங்கலாம்.


தங்க பத்திரத்தில் கிடைக்கும் வட்டி 


தங்கப் பத்திரத் திட்டத்தின் மொத்த முதிர்வு காலம் 8 ஆண்டுகள். 5வது வருடத்தில் நீங்கள் அதனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களுக்கு 2.50 சதவீத வட்டி கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.


மேலும் படிக்க | UPI Autopay : ஆட்டோ பேமெண்ட் வரம்பு அதிகரிப்பு... எவ்வளவுன்னு தெரியுமா? இதோ முழு விவரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ