Tax-Saving Tips: 80C இன் கீழ் வரி விலக்கு பெற உதவும்... சிறு சேமிப்பு திட்டங்கள்!
Tax-Saving Tips: சிறு சேமிப்பு திட்டங்களின் பட்டியலில் PPF என்னும் பொது வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் ஐந்தாண்டிற்கான போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாஸிட் திட்டம் ஆகியவை அடங்கும்.
நடப்பு நிதியாண்டில் வரிச் சலுகை பெற, வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. மார்ச் 31 வரை செய்யப்படும் குறிப்பிட்ட முதலீடுகளுக்கு வரி விலக்கு கோரலாம். மார்ச் 31க்குப் பிறகு வரிச் சேமிப்புக்கான திட்டங்களில் முதலீடு செய்தால், இந்த நிதியாண்டிற்கான விலக்கு கோர முடியாது. வரி சேமிற்கான சிறு சேமிப்பு திட்டங்களின் பட்டியலில் PPF என்னும் பொது வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் ஐந்தாண்டிற்கான போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாஸிட் திட்டம் ஆகியவை அடங்கும்.
கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் பாதுகாப்பான முதலீடு
சிறு சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் கவர்ச்சிகரமானவை. மேலும், இவற்றில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. இவற்றில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்கு கோரலாம். அதிகபட்ச விலக்கு ரூ.1.5 லட்சம் வரை கோரலாம்.
PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி
சிறு சேமிப்பு திட்டங்களின் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி. வேலை செய்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இந்த திட்டத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். PPF திட்டத்தின் ஆண்டு வட்டி விகிதம் 7.1 சதவீதம். ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் அதன் வட்டி விகிதங்களை திருத்தி அமைக்கிறது. PPF கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 500 என்ற அளவில் முதலீட்டை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பகுதியளவு பணத்தை திரும்பப் பெறலாம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY)
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்,10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கக்கூடிய சிறந்த திட்டம். உங்கள் இந்த திட்டத்தின் வட்டி விகிதம் கவர்ச்சிகரமானதாக உள்ளது. இதில் குறைந்த பட்ச முதலீடு 250 ரூபாய். இந்த திட்டத்திலும், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் உங்கள் பணத்திற்கான வட்டி வருமானத்திற்கும் வரி ஏதும் இல்லை. இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இருப்பினும், இந்த திட்டம் மகளுக்கு 21 வயதாகும்போது முதிர்ச்சியடையும் அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகளுக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு, திருமணம் மற்றும் கல்வி செலவிற்காக, இந்தத் திட்டத்தில் இருந்து பணத்தை திரும்பப் பெறலாம்.
மேலும் படிக்க | NPS: வருமான வரி கட்ட சலித்துக் கொள்பவரா? வரியே கட்டாமல் இப்படி பணத்தை சேமிக்கலாம்!
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)
தேசிய சேமிப்புச் சான்றிதழ் மிகவும் பாதுகாப்பான முதலீடு என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். இதில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.1000 . தற்போது அதன் வட்டி விகிதம் 7.7 சதவீதமாக உள்ளது. முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்மும் வசதி இல்லை. இருப்பினும், கணக்கு வைத்திருப்பவரின் மரணம் போன்ற சில சூழ்நிலைகளில், முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை திரும்பப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக இந்த திட்டமான இதில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் லாக்-இன் காலம் 5 ஆண்டுகள். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வைப்புத் தொகை தேவை. அதிகபட்சமாக ரூ.30 லட்சம் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். தற்போது இத்திட்டத்தின் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது. அதன் கட்டணம் ஒவ்வொரு காலாண்டிலும் திருத்தி அமைக்கப்படுகிறது.
ஐந்தாண்டு கால வைப்பு திட்டங்கள்
தேசிய சேமிப்பு டைம் டெபாஸிட் திட்டத்தில் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். ஆனால், 5 வருட கால டெபாசிட்களுக்கு மட்டுமே வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், விலக்கு கோரும் வசதி உள்ளது. இதில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1,000. தற்போது இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. இந்த திட்டத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணம் எடுத்தால், நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் குறைவான வட்டி கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ