மெசேஜிங் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான வாட்ஸ்அப்,  தனது விதிகள் மற்றும் நிபந்தனைகளை புதுப்பித்தத்தை அடுத்து,  பலத்த சர்ச்சையும் குழப்பமும் உண்டானது.  மக்கள் தங்கள் தரவுகள் திருடப்படும் என்ற அச்சத்தின் காரணமாக,  வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறி,  சிக்னல் டெலக்ராம் போன்ற இதேபோன்ற சேவை வழங்கும் வேறு  செயலிக்கு மாறி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 வாட்ஸ்அப் (WhatApp) இன் புதிய தனியுரிமை கொள்கை  கூறுவது என்னவென்றால், தங்களது சேவையை தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் பயனர்கள்,  தரவுகளை ஃபேஸ்புக் (Facebook) உடன் பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது. புதிய நிபந்தனைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் உண்டாக்கியுள்ளது.


 இதையடுத்து  இதேபோன்று சேவை வழங்கும்,  சிக்னல் (Signal) மற்றும் டெலகிராமின் மவுசு அதிகரித்துள்ளது.  அதிலும்  சிக்னல்  செயலியில் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருப்பதன் காரணமாக,  டெலிகிராம் அதிகமாக டவுன்லோட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


 இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தீர்மா (Theerma)  என்ற மிகவும் பாதுகாப்பான மெசேஜ் சேவையை பயன்படுத்துகிறது என தேசியப் பாதுகாப்பு முகமை வெளியிட்டுள்ள தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
தீர்மா என்பது, வாட்ஸ் அப், சிக்னல், லெலகிராம் போன்ற மெசேஜிங் சேவை வழங்கும் செயலி. 


இஸ்லாமிக் ஸ்டேட் (IS) ஈராக் மற்றும் சிரியா கோரசன் மாகாணம் (SIS-KP) வழக்கு தொடர்பான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ஜஹான்ஸைப் வாணி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர்  மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் மிகவும் பாதுகாப்பான இந்த த்ரீமாவைப் பயன்படுத்துவதை கண்டறிந்துள்ளது. 


செவ்வாயன்று சிரியாவிலிருந்து திரும்பி வந்த ரஹ்மானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு  ஏஜென்சி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததோடு, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுவான ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு, லேசர் வழிகாட்டும் ஏவுகணை அமைப்பை உருவாக்க , தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து தகவல்கலையும் நுட்பங்களையும் வழங்கி உதவியதாக  விசாரணையின் போது தெரியவந்துள்ளது.


 பயங்கரவாதிகள்,  தகவல்களைப் பயன்படுத்திக்கொள்ள தீர்மா என்ற செயலியின் டெஸ்க்டாப் பதிப்பை பயன்படுத்தும்போது,    அதனை கண்டறிவது மிக மிக கடினம் என்று தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது.  தீர்மா என்பது மிகவும் பாதுகாப்பான செயலி. ஸ்விட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்த செயலி,  ஆண்டிராய்டு மற்றும் ஐபோன் பயனாளிகளுக்கானது. ஆனால், இதனை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். இதிலிருந்து தரவுகளை பெறுவது மிகவும் கடினம் என கூறப்படுகிறது. 


ALSO READ | WhatsApp பயனர்களுக்கு நற்செய்தி: புதிய ப்ரைவஸி கொள்கை "ஒத்திவைப்பு"..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR