கடன் அட்டை என்று கூறப்படும் கிரெடிட் கார்டை அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு, வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து, கிரெடிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன. கடன் அட்டை வழங்கும் வங்கிகளில் எஸ்பிஐ வங்கியும் முக்கியமான வங்கியாகும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், 18 மில்லியனுக்கும் அதிகமான கிரெடிட் கார்டு பயனர்கள் உள்ளனர். கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியாக எஸ்பிஐ உள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ, தனது கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. கிரெடிட் கார்டு கொள்கையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து, அனைத்து வாடிக்கையாளர்களும் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். கிரெடிட் கார்டு பயனர்களுக்கான குறைந்தபட்ச நிலுவைத் தொகை (Minimum Amount Due) கணக்கீடு தொடர்பாக மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.


கிரெடிட் கார்டுக்கான குறைந்தபட்சத் தொகை என்பது, கடன் அட்டைதாரர் செலுத்த வேண்டிய தேதி அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டிய தொகையாகும். பொதுவாக, குறைந்தபட்ச நிலுவைத் தொகை மொத்த நிலுவைத் தொகையில் 5% என கணக்கிடப்படுகிறது. கிரெடிட் கார்டு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச கட்டணத் தொகையில் நீங்கள் தேர்வு செய்த EMI கட்டண மாற்றங்களும் அடங்கும். அபராத கட்டணத்தை தவிர்க்க, அட்டைதாரர்கள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய தேதியில் அல்லது அதற்கு முன்னதாக செலுத்த வேண்டும்.


வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சல்கள்


எஸ்பிஐ  தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு, MAD விதி மாற்றங்கள் குறித்து மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. அதில் 2024 மார்ச் 15ம் தேதி முதல், குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD) கணக்கீடுகளுக்கான வரையறை திருத்தப்படும் என்று  குறிப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க | Post Office MIS: மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம், மாதா மாதம் அசத்தல் வருமானம்!!


தற்போதைய குறைந்தபட்ச நிலுவைத் தொகை கணக்கீடு முறை


தற்போதுள்ள  குறைந்த பட்ச நிலுவைத் தைகை கணக்கீடு = மொத்த GST + EMI தொகை + 100% கட்டணம்/கட்டணங்கள் + 5%  + சில்லறைச் செலவுகள் மற்றும் ரொக்க அட்வான்ஸ் + மிகை வரம்புத் தொகை.  கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்துவது எப்போதும் சிறந்தது என்றாலும், அது முடியாத நிலையில், நீங்கள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலம் அபராத தொகையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு இதனை தொடருவது நல்லதல்ல. அதனால் நீங்கள் கடன் வலையில் சிக்கிக் கொள்வீர்கள். உங்கள் இருப்பை ஈடுகட்ட பணம் கிடைத்தவுடன், அதை முழுமையாகச் செலுத்துங்கள்.


புதிய குறைந்தபட்ச நிலுவைத் தொகை கணக்கீடு


புதிய விதிகளின் படி நிதிக் கட்டணங்களை விட 5% தொகை குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. நிதிக் கட்டணங்களில் 5% (நிதிக் கட்டணம் + சில்லறைச் செலவுகள் மற்றும் ரொக்க அட்வான்ஸ் தொகை) என்பது நிதிக் கட்டணங்களை விடக் குறைவாக இருந்தால், குறைந்த பட்ச கணக்கீடு மொத்த GST + EMI தொகை + 100% கட்டணம்/கட்டணங்கள் + 100% நிதிக் கட்டணங்கள் + மிகை வரம்புத் தொகை, என்ற அளவில் இருக்கும் என வங்கி தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.


குறைந்தபட்ச நிலுவைத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு


புதிய கணக்கீடு முறை மொத்த நிலுவைத் தொகையை பாதிக்காது என்றாலும், குறைந்தபட்ச நிலுவைத் தொகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. எனினும், இந்த விதியின் காரணமாக SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது.


மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ