2 தலைமுறைக்கு சோறு போடும் தொழில்! ‘இதை’ செய்தால் 70 வருடங்களுக்கு வருமானம் கேரண்டி..
Betel Nut Businesss Idea Tamil : இந்தியாவை பொறுத்தவரை ஒரு சில தொழில்கள் நல்ல லாபம் தரக்கூடியவையாக இருக்கும். அப்படி லாபம் தரக்கூடிய தொழிலை பற்றி இங்கு பார்ப்போமா?
Betel Nut Businesss Idea Tamil : இந்திய இளைஞர்கள் பலருக்கு தற்போது நல்ல வேலை தேட வேண்டும் என்ற எண்ணம் மாறி, வேலை செய்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதிலும், பலர் தங்களிடம் இருக்கும் வளங்களையும் திறன்களையும் வைத்தே சில தொழில்களை தொடங்குகின்றனர். அதிலும் சிலர், விவசாயத்தின் பக்கம் திரும்பி, அதன் மூலம் தங்களின் நிதி வளத்தையும் உடல் வளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றனர். அப்படி, அதிக வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் குறித்தும் அதன் மூலம் வரும் வருமானம் குறித்தும் இங்கு பார்ப்போம்.
வெற்றிலை தயாரிப்பு:
தோட்டக்கலை தொழிலில் இருந்து பல பயிர்கள் பணப்பயிர்களாக மாறுவதால் மக்கள் பலர் கொய்யா, மா, ஆரஞ்சு போன்ற பழங்களை விதைத்து சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இவை மட்டுமன்றி இன்னும் சில லாபம் தரும் பயிர்களும் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், வெற்றிலை பயிரிடுதல்.
வெற்றிலையின் பயன்பாடு:
உலகளவில் வெற்றிலை சாகுபடி செய்வதில் நம் நாடு முதலிடத்தில் இருக்கிறது. உலகளவில் உற்பத்தியாகும் வெற்றிலைகளில் 50 சதவிகிதம் இந்தியாவில் இருந்து மட்டும் உற்பத்தி செய்யப்படுவதாக ஒரு தரவு கூறுகிறது. வெற்றிலையை முன்னர் சாப்பிட்டபின் பாக்குடன் போடுவதற்கும், பீடாவிற்கும் உபயோகித்து வந்தனர். இப்போது இது பான், வாய் புத்துணர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படும் உணவாக இருக்கிறது. அது மட்டுமன்றி, தாம்பூல பைகளிலும் மங்களகரமான நிகழ்வுகளில் முக்கிய பொருளாகவும் இருக்கிறது, வெற்றிலை. இது மட்டுமல்லாமல், வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கின்றன.
வெற்றிலையை எப்படி பயிரிட வேண்டும்?
வெற்றிலைக்கான விதைகள், அதன் செடிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நாம் அனைத்து இடங்களிலும் காணும், உயர்ந்து நிற்கும் தென்னை மரங்களை போலவே வெற்றிலை மரங்களும் இருக்கும். இவற்றின் அடி, சுமார் 50 முதல் 70 அடி வரை இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
70 ஆண்டுகளுக்கு கவலை இல்லை:
இந்த வெற்றிலை பயிர்களை, ஒருமுறை நட்டால் போது, 2 தலைமுறைகளுக்கு அதாவது 70 வருடங்களுக்கு கவலையே இல்லை. இதை சரியாக பராமரித்தால் மட்டும் போதும். கண்டிப்பாக இது பல வருடங்களுக்கு லாபம் தரும் பயிராக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் எங்கெங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
வெற்றிலை, கேரளா, மேற்கு வங்காளம், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றுள், கர்நாடகாதான் வெற்றிலை உற்பத்தியை அதிகம் செய்யும் மாநிலமாக இருக்கிறது.
லாபம்:
வெற்றிலைக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒரு கிலோ வெற்றிலை, சுமார் ரூ.400 முதல் 600 வரை விற்கப்படுகிறது. ஒருவர், ஒரு ஏக்கரில் வெற்றிலை பயிரிட்டால், அதில் இருந்து மட்டும் பல லட்சம் லாபம் ஈட்ட முடியும் என கூறப்படுகிறது.
ஆரம்பிக்க ஆகும் செலவு..
ஒரு ஏக்கரில் வெற்றிலை பயிறிட வேண்டும் என்றால், அதற்கு பயிருக்கான செலவு மட்டும் சுமார் ரூ.25,000 வரை ஆகலாம் என கூறப்படுகிறது. மேலும், வேலை ஆட்களுக்கான கூலி ரூ.50 ஆயிரம் வரை ஆகலாம் என சில தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... டாப் 10 வங்கிகள் இவை தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ