EPF VS EPS: பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது, பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் கார்ப்பரேட்களுக்கான கட்டாயத் திட்டமாகும். EPF ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் EPF கணக்கில் பங்களிக்கின்றனர். அகவிலைப்படி உட்பட சம்பளத்தில் 12% பங்களிப்பு செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPS திட்டம் என்பது, பணியாளர் ஓய்வூதியத் திட்டமாகும், மேலும் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.15,000 வரை உள்ள ஊழியர்களுக்கு இது வழங்கப்படுகிறது. EPS திட்டத்தின் கீழ், பணியளிப்பவர் இந்தத் திட்டத்தில் பங்களிப்பார், பணியாளர் இந்த திட்டத்திற்கு பங்களிப்பதில்லை.


இந்த இரண்டு திட்டங்களுமே ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்றாலும், இரண்டிற்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன. EPF (employee provident fund) மற்றும் EPS (Employee Pension Scheme) திட்டங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. EPF மற்றும் EPS திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் மற்றும் வேறுபாடுகளைத் தெரிந்துக் கொள்வோம். 


மேலும் படிக்க | SIP: வெறும் 500 ரூபாயில் முதலீட்டை தொடங்கி 21 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவது எப்படி?


EPF மற்றும் EPS இடையே உள்ள வேறுபாடுகளும் வித்தியாசங்களும்


திட்டத்திற்கான பங்களிப்பு
இபிஎஃப் திட்டத்தில் ஊழியர் சம்பளத்தில் 12% + அகவிலைப்படியை வழங்குகிறார் என்றால், முதலாளியின் பங்களிப்பு என்பது, சம்பளம் + அகவிலைப்படியில் 3.67% என்ற அளவில் இருக்கிறது.


இபிஎஸ் திட்டத்தில் ஊழியர் பங்களிப்பு இல்லை. முதலாளி சம்பளத்தில் 8.33% மற்றும் அகவிலைப்படி என்ற அளவில் பங்களிப்பார்  


பங்களிப்பு வரம்பு
இபிஎஃப் திட்டத்தில் வரம்பு இல்லை. இதில் வரம்பு என்பது, சம்பளம் + அகவிலைப்படியின் சதவீதமாக இருக்கும். இபிஎஸ் திட்டத்தில், பங்களிப்பு மாதத்திற்கு ரூ.1250 மட்டுமே. 


பொருந்தக்கூடிய தன்மை
அனைத்து ஊழியர்களுக்கும் EPF உள்ளது என்றால், சம்பளம் + அகவிலைப்படி ரூ.15,000க்குள் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இபிஎஸ் திட்டம் கிடைக்கும்.


கணக்கில் இருந்து பணம் எடுப்பது
EPS திட்டத்தில் ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். 5 வருட சேவை முடிவதற்குள் தொகை திரும்பப் பெற்றால், திரும்பப் பெற்ற தொகைக்கு வரி விதிக்கப்படும். இருப்பினும், ஊழியர் தொடர்ந்து 60 நாட்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், EPF இருப்புத்தொகையை முழுமையாக திரும்பப் பெறலாம். 


இபிஎஸ் திட்டத்தில், 10 வருடங்களுக்கும் குறைவாக பணி புரிந்திருந்தால் அல்லது உறுப்பினர் 58 வயதை எட்டியிருந்தால், பணத்தை திரும்பப் பெறலாம். முன்கூட்டிய ஓய்வூதியத்தைப் பெற, பணியாளர் 50 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Budget 2024: சம்பள வர்க்கத்திற்கு மிகப்பெரிய நிவாரணம்.. ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பில் மாற்றம்?


ஓய்வூதிய பலன்கள்


இபிஎஃப் திட்டத்தில் 58 வயதை அடைந்த பிறகு ஓய்வு பெற்ற பிறகு அல்லது 60 நாட்கள் தொடர்ந்து வேலையில்லாமல் இருந்தால்,  வழக்கமான ஓய்வூதியம் வழங்கப்படும். 


பணியாளர் இறந்துவிட்டால், அவர் பெற்றுக் கொண்டிருந்த ஓய்வூதியம் அவரது நாமிக்கு தொடர்ந்து வழங்கப்படும் 


வட்டி
EPF கணக்கில் நிலையான வட்டி விகிதம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் அரசு மதிப்பாய்வு செய்து வட்டி எவ்வளவு என்று நிர்ணயம் செய்கிறது. தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.15% ஆகும்.
EPS கணக்கிற்கு எந்த வட்டியும் அறிவிக்கப்படுவதில்லை 


வரி பலன்கள் 
முதலீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் மீட்டெடுக்கப்பட்ட தொகை அனைத்திற்கும் வரியிலிருந்து முற்றிலும் விலக்கு உண்டு. 
ஆனால், ஊழியர்கள் EPS க்கு பங்களிக்காததால், அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் மற்றும் நிதி பலன்களுக்கு வரிச் சலுகைகளைப் பெற மாட்டார்கள். எனவே மொத்த தொகை திரும்பப் பெறும்போது அவர்களுக்கு வரி விதிக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்திற்கும் வரி விதிக்கப்படும்


எனவே, EPF மற்றும் EPS திட்டங்கள் இரண்டும் ஊழியர் நலத் திட்டங்களாகும், இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. நீங்கள் சம்பளம் பெறும் பணியாளராக இருந்தால், இந்தத் திட்டங்களின் கீழ் பெறும் பலன்களைப் புரிந்து கொள்வது அவசியம். EPF மற்றும் EPS இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால், எதிர்கால தேவைகளுக்கு சீராக திட்டமிடலாம்.


மேலும் படிக்க | ப்ரீமியம் கட்டாமலேயே கிடைக்கும் இன்சூரன்ஸ் பாலிசி! இந்த விஷயம் ஊழியர்களுக்கே தெரிவதில்லை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ