$44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்க இருந்த எலன் மஸ்க் தற்போது அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்போவதாக தனது ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார், மேலும் ட்விட்டரில் உள்ள ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த சமூக வலைதளத்தின் பங்குகள் 17.7% சரிந்து $37.10 ஆக இருந்தது, பின்னர் ஏப்ரல் மாத தொடக்கத்தில் எலன் மஸ்க் இந்த நிறுவனத்தில் தனது பங்குகளை தொடங்கிய பிறகு $54.20 ஆக ஆனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | LIC IPO: உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? எப்படி பார்ப்பது, விலை என்ன? இதோ விவரம்


கடந்த செவ்வாய்கிழமையன்று ட்விட்டரின் பங்குகள் 50% சதவீதம் சரிந்து இதன் பங்குகள் $46.75 க்கும் குறைவாக இருந்தது.  இந்த மாத தொடக்கத்தில் வெளியான அறிக்கையின்படி, ட்விட்டரில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5% சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் ட்விட்டரில் இருந்து ஸ்பேம் பாட்களை அகற்றுவதே தனது முக்கிய பணி என்று தெரிவித்துள்ளார்.  இவர் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளை நீக்க முயன்று வருகிறார், மேலும் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களின் தடை செய்யப்பட்ட கணக்குகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.



இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமையன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தாவது, ட்விட்டர் ஒப்பந்தம் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ட்விட்டரில் ஸ்பேம் மற்றும் போலியான கணக்குகளை 5 சதவீதத்திற்கும் குறைவான பயனர்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.  ட்விட்டரில் உள்ள போலியான கணக்குகள் குறித்த முழுமையான விவரங்களை சேகரித்து அதனை சரிசெய்த பின்னர் தான் மற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க | ட்விட்டரில் டிரம்பிற்கு விதிக்கப்பட்ட தடை முட்டாள்தனமானது: எலோன் மஸ்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR