UPI Transaction Limit: மொபைல்ல பணம் அனுப்புபவரா? இனி கொஞ்சம் கஷ்டம்! யூபிஐ அலர்ட்
UPI Transaction Limit Per Day: UPI பயனர்களுக்கான பெரிய அப்டேட், GPay, PhonePe, Paytm ஆகிய செயலிகளில் இப்போது ஒவ்வொரு நாளும் இவ்வளவு பணத்தை மட்டுமே மாற்ற முடியும்
UPI Transaction Limit Per Day: GPay, PhonePe, Amazon Pay, Paytm போன்ற அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் தினசரி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும், இதனால் UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் UPIஐப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் UPI மூலம் பணம் செலுத்தும் பழக்கம் உள்ளவரா? இது உங்களுக்கு மிகப் பெரிய செய்தியாக இருக்கும். Google Pay (GPay), Phone Pay (PhonePe), Amazon Pay (Amazon Pay) மற்றும் Paytm (Paytm) போன்ற அனைத்து நிறுவனங்களும் தினசரி பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பை நிர்ணயித்துள்ளன. இது, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதல்களின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. NPCI வெளியிட்ட இது தொடர்பான அறிவிப்பை மேற்கோள் காட்டி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் எவ்வளவு பண பரிவர்த்தனை செய்ய முடியும் ?
இப்போது UPI மூலம், நாள் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். சில வங்கிகள் இந்த வரம்பை 25,000 ரூபாய் என்று நிர்ணயித்துள்ளன. எந்த யூபிஐ செயலி மூலம் தினமும் எவ்வளவு பரிவர்த்தனை செய்யலாம் என்பதை இப்போது தெரிந்துக் கொள்ளுங்கள்.
Amazon Pay இன் அதிகபட்ச தினசரி வரம்பு
Amazon Pay. UPI மூலம் பணம் செலுத்துவதற்கான அதிகபட்ச வரம்பை 1,00,000 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. Amazon Pay செயலியில் UPI இல் பதிவுசெய்த பிறகு, பயனர் முதல் 24 மணிநேரத்தில் 5000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். அதே நேரத்தில், வங்கி அடிப்படையில், ஒவ்வொரு நாளும் 20 பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Paytm செயலியில் தினசரி பணப்பரிவர்த்தனை வரம்பு
Paytm UPI பயனர்களுக்கு ரூ.1 லட்சம் வரை வரம்பை நிர்ணயித்துள்ளது. இதனுடன், Paytm நேர வரம்பையும் மாற்றியுள்ளது. இனி ஒரு மணி நேரத்திற்கு 20,000 ரூபாய் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்று Paytm தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 5 பரிவர்த்தனைகள் என்ற அளவில் செய்ய முடியும் என்பதும், ஒரு நாளில் அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும் என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது.
PhonePe இன் தினசரி வரம்பு என்ன?
PhonePe தினசரி UPI பரிவர்த்தனை வரம்பை ரூ.1,00,000 என நிர்ணயித்துள்ளது. ஒரு நபர், தனது வங்கியின் வழிகாட்டுதல்களைப் பொறுத்து PhonePe UPI மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 அல்லது 20 பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
Google Pay மூலம் 10 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும்
Google Pay அல்லது GPay ஆனது அனைத்து UPI செயலிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் 10 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. பயனர்கள் ஒரு நாளில் 10 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும். இதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும்.
நேர வரம்பு இல்லாத யூபிஐ செயலிகள்
Google Pay மற்றும் Phone Pay ஆகியவற்றில் மணிநேர வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், இந்த செயலிகளின் மூலம் யாராவது உங்களுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணக் கோரிக்கையை அனுப்பினால், அதை செயலி நிறுத்திவிடும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பம்பர் உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ