New UPI Rules February 2025: யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்னும் UPI மூலம் பணம் செலுத்தும் முறை கிராமம் முதல் நகரம் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை. காய்கறிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை இதன் மூலம் பணம் செலுத்துவது எளிதாகிவிட்டது. இந்நிலையில், UPI மூலம் பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய விதி பிப்ரவரி 1 முதல் அமலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPCI சில யுபிஐ ஐடிக்களை தடை செய்வது தொடர்பான சுற்றறிக்கை வெளியிட்டு, பிப்ரவரி 1ம் தேதி முதல் சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது என தெரிவித்துள்ளது. எண்ணெழுத்து மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடி மூலம் மட்டுமே பயனர்கள் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த விதியை பின்பற்றாதவர்களின் ஐடிக்கள் பிளாக் செய்யப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரீடெய்ல் பேமெண்ட் ஆபரேட்டர்கள் பரிவர்த்தனைகளுக்கு UPI விருப்பத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


UPI ஐடிக்கான சிறப்பு எழுத்துகளுக்குப் பதிலாக எண்ணெழுத்து எழுத்துக்களைப் பயன்படுத்துமாறு இந்திய தேசிய கட்டண இடைமுகம் ஏற்கனவே மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு பலர் அதை ஏற்றுக்கொண்டனர், ஆனால் இன்னும் சில பயனர்கள் அதைப் பின்பற்றவில்லை. UPI பரிவர்த்தனை ஐடியில் எந்த ஒரு சிறப்பு எழுத்தையும் யாரும் பயன்படுத்தாததை உறுதிபடுத்தும் வகையில், இப்போது NPCI இதை அமல்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது.


UPI ஐடியில் சிறப்பு எழுத்துக்களை கொண்டிருக்கும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் மத்திய அமைப்பு ஏற்காது. அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று NPCI அறிவுறுத்தியுள்ளது.


UPI மூலம் பரிவர்த்தனைகள் மிக எளிதாக செய்யப்படுகின்றன. அதனால் அதன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 2024க்குள், UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 16.73 பில்லியனை அடைந்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | CGHS முக்கிய அப்டேட்: அரசு ஊழியர்கள், ஓய்வூத்யதாரர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள்


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 1 முதல் லெவல் 10 வரை.... யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ