EPFO Update: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பிஎஃப் உறுப்பினர்களின் வசதிக்காகவும், சீரான செயல்முறைக்காகவும் அவ்வப்போது புதிய விதிகளை ஏற்படுத்துகின்றது. சில சமயம், ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றங்களை செய்கிறது. இப்போது ஊழியர் நலனுக்கான முக்கியமான ஒரு அப்டேட்டும் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இனி மாத ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம். மாதாந்திர அடிப்படை சம்பளம் தற்போது ரூ.15,000 ஆக இருக்கும் உறுப்பினர்கள், ஓய்வு பெறும் காலத்திற்குள் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம். 


Employee Pension Scheme


EPFO இன் கீழ் ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில், அதாவது EPS -இல் உறுப்பினராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பங்களிப்பை முடித்திருக்க வேண்டும். EPS இன் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் 58 வயதில் தொடங்குகிறது.


அடிப்படை ஊதிய வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த நடவடிக்கை (Wage Ceiling Hike)


சமீபத்தில், மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா, அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, EPFO ​​இன் கீழ் அடிப்படை ஊதிய வரம்பை ரூ.15,000 -இல் இருந்து ரூ.21,000 அரசு உயர்த்தக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அதிகரிப்பு 2025 முதல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பணியாளர்கள் மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் பெற என்ன செய்ய வேண்டும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 


ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார் என வைத்துக்கொள்வோம். அப்போது அவரது அடிப்படை ஊதிய வரம்பு ரூ.15,000. இப்போது அடிப்படை ஊதிய வரம்பு 2025 ஜனவரியில் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் அடிப்படை ஊதிய வரம்பு ரூ.21 ஆயிரமாக உயரும். அந்த ஊழியர் 35 ஆண்டுகள் பணிபுரிந்து 2049ல் ஓய்வு பெறுவார். பணி ஓய்வுக்கு பின்னர் ரூ.10,000 ஓய்வூதியம் (Pension) பெறுவது எப்படி என்பதை EPF ஃபார்முலாவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | RBI MPC: குட் நியுஸ், EMI அதிகரிக்காது... ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை!!


இபிஎஸ் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சூத்திரம் (EPS Pension Calculation Formula)


EPS = ஓய்வூதியம் பெறக்கூடிய சராசரி சம்பளம் x ஓய்வூதிய சேவைகாலம்/70


- ஊழியரின் சேவை காலத்தின் முதல் பகுதி: ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரை (10 ஆண்டுகள்), அடிப்படை ஊதிய வரம்பு - 15,000
- ஊழியரின் சேவை காலத்தின் இரண்டாம் பகுதி: ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2049 வரை (25 ஆண்டுகள்), அடிப்படை ஊதிய வரம்பு - ரூ 21,000


- பகுதி-1: (10 ஆண்டுகளுக்கான ஓய்வூதியக் கணக்கீடு)
- சராசரி ஓய்வூதிய ஊதியம்: ரூ 15,000
- ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை காலம்: 10 ஆண்டுகள்
- ஓய்வூதியம் = ரூ 15,000×10/70 = மாதம் ரூ 2,142.86


= பகுதி-2: (25 ஆண்டுகளுக்கான ஓய்வூதியக் கணக்கீடு)
- சராசரி ஓய்வூதிய ஊதியம்: ரூ 21,000
- ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை காலம்: 25 ஆண்டுகள்
- ஓய்வூதியம் = ரூ 21,000×25/70 = மாதம் ரூ 7,500


35 வருட சேவைக்குப் பிறகு மொத்த ஓய்வூதிய கணக்கீடு: ரூ 2,142.86 + ரூ 7,500 = மாதம் ரூ 9,642.86. 


இந்த வகையில், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற முடியும். 


(பொறுப்பு துறப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீடுகள் முதலீட்டு ஆலோசனை அல்ல. இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. EPF குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)


மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வு... அமைச்சரவை கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு: சம்பள உயர்வு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ